திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2026 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் – அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என்) 5 | கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா –11-8-5 | பதவுரை Show / Hideஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்தில் அத்வி தீயனாயிருப்பவனே! கொள்ள குறையாக இடும்பை குழியில், Kolla Kuraiyaga Idumbai Kuzhiyil - அநுபவிக்க அநுபவிக்க்க் குறையாதபடியுள்ள துன்பங்களை விளைப்பதான கர்ப்பஸ்தானத்திலே தள்ளி புக பெய்தி கொல் என்று, Thalli Puga Peythi Kol Endru - நான் புகும்படி என்னைத்தள்ளிப் போகடுவையோ நீ என்று அதற்கு அஞ்சி, Adharku Anji - அப்பிறவித்துயர்க்கு அஞ்சி வெள்ளத்து இடை, Vellathu Idai - வெள்ளத்திலே பட்ட, Patta - அகப்பட்டுவருந்துகிற நரி இனம் போலே, Nari Inam Pole - நரிக்கூட்டம்போலே உள்ளம் துளங்கா நிற்பன், Ullam Thulangaa Nirpan - மனம் நடுங்கிநிற்பேன்யான் |