திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2027 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டில் அருளிச் செய்யும் போது இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் – நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் – அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் – அது பின்னை செய்யப் போமோ என்னில் வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் – தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும்) 6 | படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6 | பதவுரை Show / Hideபடை நின்ற, Padai Nindra - உழுபடையாகிய கலப்பையைக்கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பியொதுங்கி நின்ற பைந்தாமரையோடு, Painthaamaraiyodu - பசுமையான தாமரைக் கொடிகளும் அணி நீலம், Ani Neelam - அழகிய நீலோற்பலக்கொடிகளும் மடை நின்று, Madai Nindru - (பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து அலரும், Alarum - மலரப்பெற்ற வயல், Vayal - கழனிகளை யுடைய ஆவி, Aavi - திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற மணாளா, Manala - மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ! இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே, Idaiyan Erindha Marame Othu Irame - (ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாம்படி) இடையர்கள் (விரைந்து கையிற்கத்தி கொண்டு கிளைகளை வெட்டிச் சாய்க்கப்பெற்ற மரங்கள் போல யான் ஒருபுறம் உலராதபடி. அடைய, Adaiya - நான் உன்னையடையும்படி எனக்கு, Enakku - எளியவனான அடியேனுக்கு உன்தன் அருள், Unthan Arul - உனது கருணையை அருளாய், Arulai - அருளாய் |