திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2029 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் – பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது – ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று) 8 | அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8 | பதவுரை Show / Hideஅணி ஆர் பொழியல் சூழ், Ani Aar Pozhiyal Soozh - அழகுமிக்க சோலைகள் சூழப்பெற்ற அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கமென்னுந் திருநகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற அப்பா, Appa - தந்தையே! இனி, Ini - இனிமேல் நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உனது கருணையையே யன்றி மற்றொன்றை எனக்கு துணியேன், Enakku Thuniyen - எனக்கு (த்தஞ்சமாக) நினைத்திடேன் மணியே, Maniye - நீலமணி போன்றவடிவை யுடையவனெ! மணி மாணிக்கமே, Mani Manikkame - சிறந்த ரத்நமான மாணிக்கம் போல மேன்மை யுடையவனே! மதுசூதா, Madhusoodha - மதுவென்னும் அசுரனை யழிந்தவனெ! பரம் சோதி, Param Sothi - சிறந்த வொளியை யுடையவனே! எனக்கு உய்யும் வகை பணியாய், Enakku Uyyum Vagai Paniyai - யான் (பிறவித்துயர் தீர்ந்து பரமபதம் பெற்று) உஜ்ஜீவிக்குமாறு எனக்கு ஒரு நல்வார்த்தையருளிச் செய்யவேணும். |