திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2036 | திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம். ”தீர இரும்புண்ட நீரது போல என்னாருயிரை யாரப் பருக, எனக்காராவமுதானாயே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப்பாசுரம் என்க. 5 | இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே. | பதவுரை Show / Hideஇரும்பு, Irumbu - இரும்பானது அனன்று, Anandru - பழுக்கக் காய்ந்து உண்ட நீர் போல், Unda Neer Pol - (அக்காய்ச்சலடங்கும்படி) உட் கொண்ட ஜலம் போலே எம்பெருமானுக்கு, Emperumanukku - எம்பெருமான் திறத்திலே என் தன், En Than - என்னுடைய அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு, Aru Peral Aru Peral Anbu Pukkaettu - பெறுதற்கரிதான அன்பைச் செலுத்தி அடிமை பூண்டு, Adimai Poondhu - கைங்கரியம் பண்ணி உய்ந்து போனேன், Uyndhu Ponaen - உஜ்ஜீவிக்கப் பெற்றேன்; (அன்றியும்) வரும், Varum - (அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற புயல் வண்ணனாரை, Puyal Vannanaarai - மேக வண்ணனான அப்பெருமானை மருவி, Maruvi - கி்ட்டி என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - என்னெஞ்சிலே பொருந்த வைத்து கரும்பின் இன் சாறு போல, Karumpin In Saaru Pola - கரும்பினுடைய இனிய ரஸம் போலே பருகினேற்கு, Parugineerku - அநுபவிக்கப் பெற்ற எனக்கு இனிய ஆறே, Iniya Aarae - போக்யமாயிருக்கிறபடி என்னே!. |