திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: திருக்குறுந்தாண்டகம் (20 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2032திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து, என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்– 1
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும், மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த, விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!
பதவுரை Show / Hide
நிதியினை, Nithiyinai - (அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்
பவளம் துணை, Pavalam Thunai - பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால், Nerimaiyaal - ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன், Mun - முன்பு
கஞ்சன் மாளகண்டு, Kanjan Maalakandu - கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம், Andam - உலகங்களை
ஆளும், Aalum - ரக்ஷித்தருளினவனும்
மதியினை, Madhiyinai - (அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை, Maalai - அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை, Vaazhththi Vanangi En Manaththu Vanda Vidhiyinai - நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட, Kandu Konda - ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன், Thondanen - அடியேன்
விடுகிலேன், Vidugilena - (இனி ஒருநாளும்) விடமாட்டேன்.
2033திருக்குறுந்தாண்டகம் || தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்; நெஞ்சே! எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்; அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு ‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார். 2
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.
பதவுரை Show / Hide
காற்றினை புனலை தீயை, Kaatrinai Punalai Theei - காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை, Kadi Mathil Ilangai Settra Aetrinai - அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்காபுரியை முடித்த காளை போன்றவனும்
இமயம் மேய, Imayam Maeya - இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்
எழில் மணி திரளை, Ezhil Mani Thiralai - அழகிய மணித்திரள் போன்றவனும்
இன்பம் ஆற்றினை, Inbam Aatrinai - (வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்
அமுதம் தன்னை, Amudham Thannai - போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய
ஆர் உயிரை, Ar Uyirai - அருமையான உயிரை
உண்ட, Unda - கவர்ந்த
கூற்றினை, Kootrinai - ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம், Ullam - நெஞ்சமே!
குணம் கொண்டு, Gunam Kondo - திருக்குணங்களை முன்னிட்டு
கூறு, Koora - அநுஸந்திக்கப்பார்; (என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)
நீ கூறும் ஆறே, Nee Koorum Aare - நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)
2034திருக்குறுந்தாண்டகம் || தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும் திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்; விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்; அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார். 3
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க் காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை, வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற, மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.
பதவுரை Show / Hide
பாய் இரு பரவை தன்னுள், Pai Iru Paravai Thannul - பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பரு வரை, Paru Varai - பெரியதான (மந்தர) மலையை
திரித்து, Thirithu - சுழலச்செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து, Vaanorkku Aay Irundhu - தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட, Amudham Konda - அமுதமெடுத்துக் கொடுத்தருளின
அப்பனை, Appanai - உபகாரகனும்
எம் பிரானை, Em Piranai - எமக்கு ஸ்வாமியானவனும்
இரு, Iru - மிகப்பெரிய
வேய் சோலை சூழ்ந்து, Veiy Cholai Soozhndu - மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்)
விரி கதிர் இரிய நின்ற, Viri Kathir Iriya Nindra - ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப்பெற்ற
மாயிருஞ் சோலை, Mayirunj Cholai - திருமாலிருஞ்சோலை மலையிலே
மேய, Meya - நித்ய வாஸம் செய்தருள்கிற
மைந்தனை, Maindhanai - மிடுக்கனுமான ஸர்வேச்ரனை
வணங்கினேன், Vananginenae - வணங்கப்பெற்றேன்.
2035திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக. மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப் பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்; விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது; இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார். 4
கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட, பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு, வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!
பதவுரை Show / Hide
யான் கேட்க உற்றது உண்டு, Yaan Kaetka Utrathu Undu - அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்ற மருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய், Kezhal Aay - வராஹரூபியாகி
உலகம் கொண்ட, Ulagam Konda - பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை, Poo Kezhu Vannanaarai - பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு, Kanavil Podhara Kandu - கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால், Vaakkinaal Karumam Thannal Manathinaal - மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால், Sirathai Thannal - ச்ரத்தையோடு
வேட்கை மீதுர, Vedkai Meedhura - ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு, Vaangi Vizhunghinairku - பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே, Iniya Aarae - போக்யமாயிருக்கிறவிதம் என்னே!
2036திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம். ”தீர இரும்புண்ட நீரது போல என்னாருயிரை யாரப் பருக, எனக்காராவமுதானாயே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப்பாசுரம் என்க. 5
இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன் அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன், வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து, கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.
பதவுரை Show / Hide
இரும்பு, Irumbu - இரும்பானது
அனன்று, Anandru - பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல், Unda Neer Pol - (அக்காய்ச்சலடங்கும்படி) உட் கொண்ட ஜலம் போலே
எம்பெருமானுக்கு, Emperumanukku - எம்பெருமான் திறத்திலே
என் தன், En Than - என்னுடைய
அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு, Aru Peral Aru Peral Anbu Pukkaettu - பெறுதற்கரிதான அன்பைச் செலுத்தி
அடிமை பூண்டு, Adimai Poondhu - கைங்கரியம் பண்ணி
உய்ந்து போனேன், Uyndhu Ponaen - உஜ்ஜீவிக்கப் பெற்றேன்; (அன்றியும்)
வரும், Varum - (அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற
புயல் வண்ணனாரை, Puyal Vannanaarai - மேக வண்ணனான அப்பெருமானை
மருவி, Maruvi - கி்ட்டி
என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - என்னெஞ்சிலே பொருந்த வைத்து
கரும்பின் இன் சாறு போல, Karumpin In Saaru Pola - கரும்பினுடைய இனிய ரஸம் போலே
பருகினேற்கு, Parugineerku - அநுபவிக்கப் பெற்ற எனக்கு
இனிய ஆறே, Iniya Aarae - போக்யமாயிருக்கிறபடி என்னே!.
2037திருக்குறுந்தாண்டகம் || பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே, என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல, பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார். 6
மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட, கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப் பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?
பதவுரை Show / Hide
மூவரில், Moovariyil - த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை, Muthalvan Aaya Oruvanai - முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை, Ulagam Konda Kovinaik - (மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய, Kudandhai Maeya - திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை, Guru Mani Thiralai - சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை, Inbam Paavinaik - இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை, Pachchai Thenai - பசுந்தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை, Paim Ponnai - பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை, Amarar Senni Poovinai - நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும், Pugazhume - புகழ்கின்ற
தொண்டர் தாம், Thondar Thaam - தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர், En Solli Pugazhvar - எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?
2038திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன; என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும். 7
இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத் தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே
பதவுரை Show / Hide
எமக்கு, Emakku - நமக்கு
இம்மையை, Immayai - இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை, Marumai Thannai - பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை, Virintha Solai - பரந்த சோலைகளை யுடையதாய்
வியன், Viyan - ஆச்சரியமான
திரு அரங்கம், Thiru Arangam - ஸ்ரீரங்கத்திலே
மேய, Meya - நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை, Semmaiye Karumai Thannai Thirumalai - (யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை, Thirumalai - திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை, Orumaiyanai - (மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை, Thanmaiyai - சீலத்தை
நினைவார், Ninaivaar - நினைக்க வல்லவர்கள்
என் தன், En Than - என்னுடைய
தலை மிசை, Thalai Misai - தலையிலே
மன்னுவார், Mannuvaar - பொருந்தத் தக்கவர்கள்
2039திருக்குறுந்தாண்டகம் || ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார். 8
வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே
பதவுரை Show / Hide
வானி்டை புயலை, Vaanidai Puyalai - ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை, Maalai - (அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும்
வரையிடே, Varaiyide - மலையிலே
பிரசம் ஈன்ற, Piracham Eendra - தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி, Maanidam Piravi - (தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர், Mathikkilar - எண்ணுகிறார்களில்லை;
அந்தோ, Andho - ஐயோ! ;
தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய
தேன் இடை, Then Idai - தேனீலே முளைத்த
கரும்பின், Karumpin - கரும்பினுடைய
சாற்றை, Saatrai - சாறு போலப் பரம போக்யனும்
திருவினை, Thiruvinai - திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி, Maruvi - ஆச்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு, Unidai Kurampai Vaalkaikku - மாம்ஸமயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே, Urudhiye - உறுதியையே
வேண்டினார், Veandinar - விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க, Kolga - (இதை நீங்கள்) அறிந்து வைப்பது.
2040திருக்குறுந்தாண்டகம் || நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார். என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை; நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார். 9
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம் தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே
பதவுரை Show / Hide
உள்ளமோ, Ullamo - மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது, Onril Nilladhu - ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையின் எரி, Osaiyin Eri - ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும், Ninru Unnum - கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளிமேல், Kollimeel - கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல, Erumbu Pola - எறும்பு போலே
என் தன் உள்ளம், En Than Ullam - எனது நெஞ்சானது
குழையும், Kuzhaiyum - நைகின்றது;
ஆல், Aal - அந்தோ! ;
தெள்ளியீர், Thelliyeer - தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய், Thevarkku Ellam Thevar Aay - தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர், Olliyeer - தேஜஸ்வி யானவரே!
எழுமையும், Ezhumaiyum - எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால், Ummmai Allaal - தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம், Thunai Ilom - வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.
2041திருக்குறுந்தாண்டகம் || கடலிலே நீந்த வேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமா போலே, அநுஸந்திக்கப் புகுந்து தரித்து நிற்க மாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார். “உருகுமால் நெஞ்சமுயிரின் பரமன்றிப், பெருகுமால் வேட்கையுமென்செய்கேன் தொண்டனேன்“ என்ற நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார். பக்திப் பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சை யிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின நான் என்ன செய்வேனென்கிறார்: ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ? தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார். 10
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன் பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என் அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே
பதவுரை Show / Hide
சித்தமும், Siththamum - நெஞ்சமும்
செவ்வை நில்லாது, Sevvai Nilladhu - தரித்து நிற்கிறதில்லை;
தீ வினையேன், Thee Vinaiyen - மஹா பாபியான நான்
என் செய்கேன், En Seigyen - என்ன பண்ணுவேன்?
எந்தாய், Endhai - எம்பெருமானே!
பத்திமைக்கு, Pathimaykku - அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே
அன்பு உடையேன் ஆவதே, Anbu Udaiyen Aavadhe - (கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி
பணியாய், Paniyai - செய்தருளவேணும்;
முத்து, Muthu - முத்துப் போன்றவனே!
ஒளி மரகதமே, Oli Maragathame - ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனே!
முழங்கு ஒளி முகில் வண்ணா, Muzhangu Oli Mukil Vannaa - கர்ஜிப்பதும் ஒளிபொருந்தியது மான காளமுகம் போன்றவனே!
என் அத்த, En Attha - என் நாயனே!
நின் அடிமை அல்லால், Nin Adimai Allaal - உன் பக்கல் கைங்கரியம் தவிர
யாது ஒன்றும் அறிகிலேன், Yaadhu Ondrum Arikilaen - வேறொன்றும் (புருஷார்த்த மாக) அறியமாட்டேன். (சித்தமும் செவ்வை நில்லாது)
2042திருக்குறுந்தாண்டகம் || என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ? நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்– 11
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே
பதவுரை Show / Hide
எந்தாய், Endhai - எம்பெருமானே!,
தொண்டு எல்லாம், Thondu Ellam - எல்லாவகையான அடிமைகளையும்
பரவி, Paravi - (செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது, Ninnai Thozhudhu - உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு, Adi Paniyum Aaru Kandu - திருவடிகளிலே பணிவிடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே, Thaan Kavalai Theerppaan Aavadhe - நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய், Paniyai - அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய், Andam Aay - அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய், En Thisaikkum Aadhi Aai - எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம், Neethi Aana Pandam Aam - முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி, Parama Sothi - பரஞ்சோதியே!
நின்னையே, Ninnaiye - உன்னையே
பரவுவேன், Paravuvein - ஸ்தோத்ரம் பண்ணுவேன்.
2043திருக்குறுந்தாண்டகம் || பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி ‘ ஐயோ! இப்படி அபசாரப்பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர அப்பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார். 12
ஆவியயை யரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால், தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம், பாவியேன் பிழைத்தவாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.
பதவுரை Show / Hide
ஆவியை, Aaviye - உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை, Arangam Maalai - திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால், Azhukku Udambu Echil Vaayal - இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான், Thuymai Il Thonda Naan - அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம், Thollai Naamam - அநாதியான திருநாமங்களை
சொல்லினேன், Sollinain - சொன்னேன்;
பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு, Paaviyen Pizhaitha Aaru Endru Anjineerku - பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று, Anjal Endru - அபயமளித்து
காவி போல், Kaavi Pol - கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார், Vannaar Vandu En Kan Ullae Thonrinaar - என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.
2044திருக்குறுந்தாண்டகம் || தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால் இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார். 13
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச் சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
பதவுரை Show / Hide
இரும்பு, Irumbu - இரும்பானது
அனன்று, Anandru - பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட, Unda - உட் கொண்ட
நீரும், Neerum - ஜலமும்
போதரும், Podharum - வெளியிலே வந்து விடும்;
கொள்க, Kolga - (இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன், En Than - என்னுடையவையாய்
அரு, Aru - போக்கமுடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம், Pini Paavam Ellam - நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன, Ennai Vittu Aknranan - என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர், Karumbu Amar - வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த, Solai Soozhntha - சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம், Maa Arangam - மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட, Koyil Konda - இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை, Karumbinai - பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை, En Kan Inai - எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு, Kandu Kondo - பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ, Kalikkum Aaru Ae - மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)
2045திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று ஆனந்த பரவசராய்ப் பேசினவர், ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு, கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார். 14
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும் பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே
பதவுரை Show / Hide
காவியை, Kaaviyai - கரு நெய்தல் மலரை
வென்ற, Vendra - தோற்பித்த
கண்ணார், Kannaar - கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே, Kalaviye - கலவியையே
கருதி, Karuthi - நினைத்துக் கொண்டு
நாளும், Naalum - அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி, Paaviyen Aaga Enni - மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே, Adhanulle - அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன், Pazhuthozhindhen - பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர், Thuvi Ser - (அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும், Annam Mannum - அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல், Sozh Punai - சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை, Kudandai Yaanai - திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன், Paaviyen - பாவியான நான்
பாவியாது, Paaviyaadhu - சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன், Paaviyen Aayinenn - (மேலும்) மஹா பாபியானேன்.
2046திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி; அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்; இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும். 15
முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே
பதவுரை Show / Hide
முன், Mun - முன் பொருகால்
பொலா, Polaa - பொல்லாதவனான
இராவணன் தன், Iraavanan Than - இராவணனுடைய
முது மதிள் இலங்கை, Muthu Mathil Ilangai - வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து, Veviththu - சுடுவித்து
அனுமன், Anuman - சிறிய திருவடி
அன்பினால் வந்து, Anbinhaal Vandu - மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு, Aangu - கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய, Adi Inai Paniya - உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு, Nindraarku - நின்ற பெருமானுக்கு
அடியனேன், Adiyanen - அடியேன்
என்பு எலாம், Enbu Elam - எலும்பெல்லாம்
உருகி, Urugi - உருகி
உக்கிட்டு, Ukkittu - இற்றுப் போய்
என்னுடை, Ennudai - என்னுடைய
நெஞ்சம் என்னும், Nenjam Ennum - நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால், Anbinhaal - ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன், Nyanam Neer Kondo Aattuvan - ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.
2047திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்; இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார். முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்; “மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம். “அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம். 16
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம் தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே
பதவுரை Show / Hide
மாயம், Maayam - மாயச் செய்கையை யுடைய
மான், Maan - மாரீசனாகிற மான்
மாய, Maaya - முடியும்படி
செற்று, Settru - கொன்றவனாயும்
மருது, Maruthu - (இரட்டை) மருத மரங்கள்
இற, Ira - முறிந்து விழும்படி
நடந்து, Nadandhu - நடை கற்றவனாயும்
வையம் தாய், Vaiyam Thaai - (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி, Appadi - அப்படிப்பட்ட
மா, Maa - பெரிதான
பரவை, Paravai - கடலானது
பொங்க, Ponga - பொங்கும் படியாக
தட வரை, Thada Varai - பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து, Thirithu - சுழலச் செய்து (அமுதமெடுத்து)
வானோர்க்கு, Vaanorkku - தேவர்களுக்கு
ஈயும், Eeyum - கொடுத்தவனாயுமுள்ள
மால், Maal - ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு, Em Piranaarukku - எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும், Sorkkal Ennum - வாய்மொழிகளாகிற
தூய, Thuya - பரிசுத்தமான
மா மாலை கொண்டு, Maa Maalai Kondu - சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன், Thondanen - அடியேன்
சூட்டுவேன், Sootuvein - சூட்டுவேன்
2048திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்; அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது; இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை; எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ? முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான். இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில், ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன், எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்; சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா; ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று; ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது; அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார். 17
பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம் பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே
பதவுரை Show / Hide
பேர் உளான், Peer Ulaan - திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை, Perumai - பெருமையை
பேசினார், Pesinaar - பேசினவர்கள்
உய்ந்து போனார், Uyinthu Poonaar - உஜ்ஜீவித்தார்கள்.
என்பது, Enbathu - என்று சொல்வது
இ உலகின் வண்ணம், I Ulagin Vannam - சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன், Pethaeyen - அறிவு கேடனான நானோவென்
பேசியேன், Pesiyen - (அவன் பெருமையைப் பேச வல்லவனொ!)
ஏச மாட்டேன், Eesa Maatten - (சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார், Piravi Neeththaar - ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார், Pesiy Eesinaar - அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு, Piravi Neeththarku - இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால், Alai Kadal Vannaar Paal - அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது, Aasaiyo Peridhu - ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க, Kolga - இதனை உணர்க.
2049திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம் ஒரு நாளும் கை கூடா தென்கிறார் 18
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே
பதவுரை Show / Hide
இளைப்பினை இயக்கம் நீக்கி, Ilaippinai Iyakkam Neekki - க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து, Irundhu - அசைவின்றி யிருந்து
முன் இமையை கூட்டி, Mun Imaiyai Koottu - மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி, Alappu Il Aimpulan Adakki - அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண், Avar Kan - எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து, Thulakkam Il Sindhai Neithu Anbu Vaiththu - இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு, Aangu - அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும், Sudar Vittu Thonralum - ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை, Vilakkini - விளக்காகிய எம்பெருமானை
விதியில், Vidhiyil - சாஸ்திர விதிப்படியே
காண்பார், Kaanpaar - காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே, Meimmaiye - உள்ளபடியே
காண்கிற் பாரே, Kaangir Pare - காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி)
2050திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். 19
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே
பதவுரை Show / Hide
பிண்டி ஆர் மண்டை ஏந்தி, Pindhi Ar Mandai Aendhi - உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை, Pirar Manai - அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து, Thiri Thandhu - திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும், Unnum - ஜீவித்த
முண்டியான், Mundiyan - மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம், Saapam - ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த, Theertha - போக்கின
ஒருவன், Oruvan - அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர், Oor - திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும், Ulagam Aendhum - உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர், Kandiyur - திருக்கண்டியூரென்ன
அரங்கம், Arangam - திருவரங்கமென்ன
மெய்யம், Meyyam - திருமெய்யமென்ன
கச்சி, Kacchi - திருக்கச்சியென்ன
பேர், Per - திருப்பேர்நகரென்ன
மல்லை, Mallai - திருக் கடன்மல்லை யென்ன
என்று, Endru - ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார், Mandinaar - அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால், Uyyaal Allaal - உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு, Mattraiyaarkku - அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே, Uyyaal Aame - உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)
2051திருக்குறுந்தாண்டகம் || தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும் இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க் கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று. 20
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும் ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே
பதவுரை Show / Hide
வானவர் தங்கள் கோனும், Vaanavar Thangal Koonum - தேவேந்திரனும்
மலர்மிசை அயனும், Malar Misai Ayanum - பூவிற் பிறந்த பிரமனும்
நாளும், Naalum - நாள் தோறும்
தே மலர் தூவி, The Malar Thoovi - தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும், Aethum - துதிக்கும் படியாக வுள்ள
சே அடி, Sae Adi - செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை, Maalai - ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல், Maanam Vel - பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
வண் தமிழ், Van Tamil - செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும், Maalai Naalaindhum - இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி, Unam Adhu Inri - குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம், Vallar Thaam - கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு, Oli Visumbu - பரமபதத்தை
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்