திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2039 | திருக்குறுந்தாண்டகம் || ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார். 8 | வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே | பதவுரை Show / Hideவானி்டை புயலை, Vaanidai Puyalai - ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும் மாலை, Maalai - (அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும் வரையிடே, Varaiyide - மலையிலே பிரசம் ஈன்ற, Piracham Eendra - தேனீக்களாலே சேர்க்கப்பட்ட மானிடம் பிறவி, Maanidam Piravi - (தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை மதி்க்கிலர், Mathikkilar - எண்ணுகிறார்களில்லை; அந்தோ, Andho - ஐயோ! ; தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய தேன் இடை, Then Idai - தேனீலே முளைத்த கரும்பின், Karumpin - கரும்பினுடைய சாற்றை, Saatrai - சாறு போலப் பரம போக்யனும் திருவினை, Thiruvinai - திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை மருவி, Maruvi - ஆச்ரயித்து வாழ மாட்டார்கள்– ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு, Unidai Kurampai Vaalkaikku - மாம்ஸமயமான சரீரத்தில் வாழ்வதற்கு உறுதியே, Urudhiye - உறுதியையே வேண்டினார், Veandinar - விரும்பி நிற்கின்றார்கள்; கொள்க, Kolga - (இதை நீங்கள்) அறிந்து வைப்பது. |