திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2040 | திருக்குறுந்தாண்டகம் || நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார். என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை; நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார். 9 | உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே | பதவுரை Show / Hideஉள்ளமோ, Ullamo - மனமோ வென்னில் ஒன்றில் நில்லாது, Onril Nilladhu - ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை; ஓசையின் எரி, Osaiyin Eri - ஓசையோடு கூடின அக்னி நின்று உண்ணும், Ninru Unnum - கவ்வி நின்று உண்ணப் பெற்ற கொள்ளிமேல், Kollimeel - கொள்ளியில் அகப்பட்ட எறும்பு போல, Erumbu Pola - எறும்பு போலே என் தன் உள்ளம், En Than Ullam - எனது நெஞ்சானது குழையும், Kuzhaiyum - நைகின்றது; ஆல், Aal - அந்தோ! ; தெள்ளியீர், Thelliyeer - தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய் தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய், Thevarkku Ellam Thevar Aay - தேவாதி தேவனாயிருந்து வைத்து ஒள்ளியீர், Olliyeer - தேஜஸ்வி யானவரே! எழுமையும், Ezhumaiyum - எந்த நிலைமையிலும் உம்மை அல்லால், Ummmai Allaal - தேவரீரைத் தவிர்த்து துணை இலோம், Thunai Ilom - வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம். |