திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2041 | திருக்குறுந்தாண்டகம் || கடலிலே நீந்த வேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமா போலே, அநுஸந்திக்கப் புகுந்து தரித்து நிற்க மாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார். “உருகுமால் நெஞ்சமுயிரின் பரமன்றிப், பெருகுமால் வேட்கையுமென்செய்கேன் தொண்டனேன்“ என்ற நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார். பக்திப் பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சை யிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின நான் என்ன செய்வேனென்கிறார்: ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ? தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார். 10 | சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே | பதவுரை Show / Hideசித்தமும், Siththamum - நெஞ்சமும் செவ்வை நில்லாது, Sevvai Nilladhu - தரித்து நிற்கிறதில்லை; தீ வினையேன், Thee Vinaiyen - மஹா பாபியான நான் என் செய்கேன், En Seigyen - என்ன பண்ணுவேன்? எந்தாய், Endhai - எம்பெருமானே! பத்திமைக்கு, Pathimaykku - அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே அன்பு உடையேன் ஆவதே, Anbu Udaiyen Aavadhe - (கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி பணியாய், Paniyai - செய்தருளவேணும்; முத்து, Muthu - முத்துப் போன்றவனே! ஒளி மரகதமே, Oli Maragathame - ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனே! முழங்கு ஒளி முகில் வண்ணா, Muzhangu Oli Mukil Vannaa - கர்ஜிப்பதும் ஒளிபொருந்தியது மான காளமுகம் போன்றவனே! என் அத்த, En Attha - என் நாயனே! நின் அடிமை அல்லால், Nin Adimai Allaal - உன் பக்கல் கைங்கரியம் தவிர யாது ஒன்றும் அறிகிலேன், Yaadhu Ondrum Arikilaen - வேறொன்றும் (புருஷார்த்த மாக) அறியமாட்டேன். (சித்தமும் செவ்வை நில்லாது) |