திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2043 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2043திருக்குறுந்தாண்டகம் || பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி ‘ ஐயோ! இப்படி அபசாரப்பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர அப்பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார். 12
ஆவியயை யரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால், தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம், பாவியேன் பிழைத்தவாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.
பதவுரை Show / Hide
ஆவியை, Aaviye - உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை, Arangam Maalai - திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால், Azhukku Udambu Echil Vaayal - இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான், Thuymai Il Thonda Naan - அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம், Thollai Naamam - அநாதியான திருநாமங்களை
சொல்லினேன், Sollinain - சொன்னேன்;
பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு, Paaviyen Pizhaitha Aaru Endru Anjineerku - பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று, Anjal Endru - அபயமளித்து
காவி போல், Kaavi Pol - கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார், Vannaar Vandu En Kan Ullae Thonrinaar - என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.