திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2044 | திருக்குறுந்தாண்டகம் || தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால் இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார். 13 | இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே | பதவுரை Show / Hideஇரும்பு, Irumbu - இரும்பானது அனன்று, Anandru - பழுக்கக் காய்ச்சப் பெற்று உண்ட, Unda - உட் கொண்ட நீரும், Neerum - ஜலமும் போதரும், Podharum - வெளியிலே வந்து விடும்; கொள்க, Kolga - (இதை) உறுதியாக நினையுங்கோள்; என் தன், En Than - என்னுடையவையாய் அரு, Aru - போக்கமுடியாதவையாய் பிணி பாவம் எல்லாம், Pini Paavam Ellam - நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம் என்னை விட்டு அகன்றன, Ennai Vittu Aknranan - என்னை விட்டு நீங்கிப் போயின கரும்பு அமர், Karumbu Amar - வண்டுகள் பொருந்திய சோலை சூழ்ந்த, Solai Soozhntha - சோலைகளாலே சூழப்பட்ட மா அரங்கம், Maa Arangam - மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை கோயில் கொண்ட, Koyil Konda - இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற கரும்பினை, Karumbinai - பரம போக்யனான எம்பெருமானை என் கண் இணை, En Kan Inai - எனது இரண்டு கண்களும் கண்டு கொண்டு, Kandu Kondo - பார்த்த வண்ணமாய் களிக்கும் ஆறு ஏ, Kalikkum Aaru Ae - மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்) |