திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2046 | திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி; அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்; இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும். 15 | முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே | பதவுரை Show / Hideமுன், Mun - முன் பொருகால் பொலா, Polaa - பொல்லாதவனான இராவணன் தன், Iraavanan Than - இராவணனுடைய முது மதிள் இலங்கை, Muthu Mathil Ilangai - வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை வேவித்து, Veviththu - சுடுவித்து அனுமன், Anuman - சிறிய திருவடி அன்பினால் வந்து, Anbinhaal Vandu - மகிழ்ச்சியுடனே வந்து ஆங்கு, Aangu - கிஷ்கிந்தையாலே அடி இணை பணிய, Adi Inai Paniya - உபய பாதங்களையும் தொழும்படியாக நின்றாற்கு, Nindraarku - நின்ற பெருமானுக்கு அடியனேன், Adiyanen - அடியேன் என்பு எலாம், Enbu Elam - எலும்பெல்லாம் உருகி, Urugi - உருகி உக்கிட்டு, Ukkittu - இற்றுப் போய் என்னுடை, Ennudai - என்னுடைய நெஞ்சம் என்னும், Nenjam Ennum - நெஞ்சென்று சொல்லப் படுகிற அன்பினால், Anbinhaal - ஆர்வத்தினால் ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன், Nyanam Neer Kondo Aattuvan - ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன். |