திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2047 | திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்; இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார். முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்; “மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம். “அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம். 16 | மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே | பதவுரை Show / Hideமாயம், Maayam - மாயச் செய்கையை யுடைய மான், Maan - மாரீசனாகிற மான் மாய, Maaya - முடியும்படி செற்று, Settru - கொன்றவனாயும் மருது, Maruthu - (இரட்டை) மருத மரங்கள் இற, Ira - முறிந்து விழும்படி நடந்து, Nadandhu - நடை கற்றவனாயும் வையம் தாய், Vaiyam Thaai - (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும் அப்படி, Appadi - அப்படிப்பட்ட மா, Maa - பெரிதான பரவை, Paravai - கடலானது பொங்க, Ponga - பொங்கும் படியாக தட வரை, Thada Varai - பெரிதான மந்தர பர்வதத்தை திரித்து, Thirithu - சுழலச் செய்து (அமுதமெடுத்து) வானோர்க்கு, Vaanorkku - தேவர்களுக்கு ஈயும், Eeyum - கொடுத்தவனாயுமுள்ள மால், Maal - ஆச்ரித வ்யாமோஹ சாலியான எம் பிரானாருக்கு, Em Piranaarukku - எம்பெருமானுக்கு சொற்கள் என்னும், Sorkkal Ennum - வாய்மொழிகளாகிற தூய, Thuya - பரிசுத்தமான மா மாலை கொண்டு, Maa Maalai Kondu - சிறந்த மாலையைக் கொண்டு தொண்டனேன், Thondanen - அடியேன் சூட்டுவேன், Sootuvein - சூட்டுவேன் |