Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2052 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2052திரு நெடும் தாண்டகம் || தேஹாத்மாபிமானத்தைப் போக்கினது முதலாகத் திருவடிகளோடு ஸம்பந்தந்தை யளித்தளவாக வுள்ள உபகார பரம்பரைகளைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில். 1
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே. - 1
முன் உருவில்,Mun Uruvil - முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில்
மின் உரு ஆய்,Min Uru Aay - மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்
வேதம் நான்கு ஆய்,Vedham Naangu Aay - நால் வேதங்களையும் உபகரித்தவனாய்
விளக்கு ஒளி ஆய்,Vilakku Oli Aay - இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய்
முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்,Mulaitthu Ezhundha Thingal Thaan Aay - (மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்
பின் உரு ஆய்,Pin Uru Aay - இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி
முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்,Mun Uruvin Pini Mooppu Illaa Pirappu Ili Aay - முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது,Irappadharkae Ennaadhu - கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய்
எண்ணும் பொன் உரு ஆய்,Ennum Pon Uru Aay - எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய்
மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்,Mani Uruvin Bootham Aindhu Aay Punal Uru Aay - திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்
புனல் உரு ஆய்,Punal Uru Aay - தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய்
அனல் உருவின் திகழும்,Anal Uruvin Thigalum - அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய்
சோதி தன் உரு ஆய்,Sothi Than Uru Aay - ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
என் உருவில் நின்ற,En Uruvil Nindra - என் சரீரத்திலே நின்றவனாய்
எந்தை,Endhai - எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய
தளிர்புரையும் திரு அடி,Thalirpuraiyum Thiru Adi - தளிர் போன்ற திருவடிகள்
என் தலை மேல,En Thalai Maela - எனது தலையிலே இரா நின்றன;
ஏ!,A! - ஆச்சரியம்