| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2052 | திரு நெடும் தாண்டகம் || தேஹாத்மாபிமானத்தைப் போக்கினது முதலாகத் திருவடிகளோடு ஸம்பந்தந்தை யளித்தளவாக வுள்ள உபகார பரம்பரைகளைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில். 1 | மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய், பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும் பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி, தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே. - 1 | முன் உருவில்,Mun Uruvil - முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில் மின் உரு ஆய்,Min Uru Aay - மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய் வேதம் நான்கு ஆய்,Vedham Naangu Aay - நால் வேதங்களையும் உபகரித்தவனாய் விளக்கு ஒளி ஆய்,Vilakku Oli Aay - இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய் முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்,Mulaitthu Ezhundha Thingal Thaan Aay - (மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய் பின் உரு ஆய்,Pin Uru Aay - இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்,Mun Uruvin Pini Mooppu Illaa Pirappu Ili Aay - முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய் இறப்பதற்கே எண்ணாது,Irappadharkae Ennaadhu - கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய் எண்ணும் பொன் உரு ஆய்,Ennum Pon Uru Aay - எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய் மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்,Mani Uruvin Bootham Aindhu Aay Punal Uru Aay - திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய் புனல் உரு ஆய்,Punal Uru Aay - தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய் அனல் உருவின் திகழும்,Anal Uruvin Thigalum - அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய் சோதி தன் உரு ஆய்,Sothi Than Uru Aay - ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய் என் உருவில் நின்ற,En Uruvil Nindra - என் சரீரத்திலே நின்றவனாய் எந்தை,Endhai - எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய தளிர்புரையும் திரு அடி,Thalirpuraiyum Thiru Adi - தளிர் போன்ற திருவடிகள் என் தலை மேல,En Thalai Maela - எனது தலையிலே இரா நின்றன; ஏ!,A! - ஆச்சரியம் |
| 2053 | திரு நெடும் தாண்டகம் || அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளிடத்தும் ஸாம்யபுத்தி நடப்பதாகிற ஒரு அநர்த்தமுண்டே, அந்த அநர்த்தத்தையும் எம்பெருமான் தமக்குப் போக்கியருளின படியைப் பேசுகிறார் இப்பாட்டில். 2 | பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற, ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது, ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற, மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே - 2 | ஏர் உருவில்,Er Uruvil - அழகிற ஜகத்தில் மூவருமே என்ன நின்ற,Moovarumae Enna Nindra - மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த இமையவர் தம்,Imaiyavar Tham - தேவதைகளினுடைய திரு உரு,Thiru Uru - ரூபங்களை வேறு எண்ணும் போது,Veru Ennum Podhu - தனித்தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில் ஓர் உருவம்,Or Uruvam - (நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது பொன் உருவம்,Pon Uruvam - பொன்னின் வடிவாகவுள்ளது; ஒன்று,Onru - (பரம சிவனாகிற) ஒருமூர்த்தி யானது செம் தீ,Sem Thee - சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது; ஒன்று,Onru - (ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது மா கடல் உருவம்,Maa Kadal Uruvam - கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது; ஒத்து நின்ற,Othu Nindra - சேர்ந்திருக்கின்ற மூ உருவும்,Moo Uruvum - (மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும் கண்ட போது,Kanda Podhu - (பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து, பார் உருவி,Paar Uravi - கடினமான பூமியென்ன நீர்,Neer - ஜலமென்ன எரி,Eri - அக்நியென்ன கால்,Kaal - வாயுவென்ன விசும்பும் ஆகி,Visumbum Aagi - ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும் பல்வேறு சமயமும் ஆய்,Palveru Samayamum Aay - பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும் பரந்து நின்ற,Parandhu Nindra - இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய் ஆம் சோதி,Aam Sothi - பரஞ்சோதியென்று போற்றப் படுமதாய் ஒன்று,Onru - அத்விதீயமா யிருக்கின்ற முகில் உருவம்,Mugil Uruvam - காளமேக வுருவமானது எம் அடிகள் உருவம்,Em Adigal Uruvam - எம்பெருமானுடைய வடிவமாம் |
| 2054 | திரு நெடும் தாண்டகம் || திரிமூர்த்தி ஸாம்ய ப்ரமத்தை எம்பெருமான் தமக்குப் போக்கித் தந்தருளின படியை அருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில். எம்பெருமான் தனது நிர்ஹேதுக க்ருபையினால் தமக்குக் காட்டித் தந்தருளின திருமேனியின் வைலக்ஷண்யத்தை அநுபவித்துப் பேசுகிறார் இப்பாட்டில். 3 | திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக் கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும், பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை, ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால், கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே? - 3 | திரு வடிவில்,Thiru Vadivil - விலக்ஷணமான வடிவுகளில், கருநெடுமால்,Karunedumaal - காளமேகச்யாமமான வடிவை பெரு வடிவின்,Peru Vadivin - பெரிய கூர்மரூபத்தோடே கடல்,Kadal - கடலினின்றும் அமுதம் கொண்ட காலம்,Amudham Konda Kaalam - (தேவர்களுக்கு) அமுதமெடுத்துக்கொடுத்த காலமாகிய கிருதயுகத்திலே வளைஉரு ஆய் திகழ் ந்தான் என்றும்,Valai Uru Aay Thigalndhaan Endrum - சங்குபோலே வெளுத்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்றும் திரேதைக்கண்,Thirethaikkan - த்ரேதாயுகத்திலே சேயன் என்றும்,Saeyan Endrum - சிவந்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்றும் கரு நீலம் வண்ணன் என்றும்,Karu Neelam Vannan Endrum - (கலியுகத்தில்)(இயற்கையான) நீலநிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும் ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்,Oozhi Thoru Oozhi Nindru Eaeththal Allaalaal - எப்போதும் நின்று துதிப்பதல்லாமல் ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா,Oru Vadivam Endru Or Uru Endru Unaral Aagaa - வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப்போகாமலிருக்கிற கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை,Karu Vadivin Semvannam Kannan Thannai Perumaanai - கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக்கண்களையுமுடையனான எம்பெருமானை யார் ஒருவர்,Yaar Oruvar - ஆரேனுமொருவர் காண்கிற்,Kaankir paarae - (ஸ்வப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ? கட்டுரை,Katturai - (நெஞ்சே!) சொல்லு. |
| 2055 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானைத் தாம் ஒருவராக அநுபவிப்பதில் த்ருப்தி பிறவாமையாலே உசாத் துணை கூட்டிக் கொள்ள விருப்பமுண்டாயிற்று ஆழ்வார்க்கு; முக்தர்களும் நித்யர்களும் இந்நிலத்தவ ரல்லாமையாலே அவர்கள் துணையாகப் பெற்றதில்லை; இந் நிலத்தவரான ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடும் அவர்களாகையாலும் துணையாக மாட்டார்கள்; இனி ஒரு போதும் தம்மை விட்டுப் பிரியாதிருக்கிற தமது திருவுள்ள மொன்றே தமக்குத் துணையாகவற்றாதலால் ‘நெஞ்சே! இவ் விஷயத்தை நாம் அநுபவிக்கும் படி பாராய்‘ என்கிறார். 4 | இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய், செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி, அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சம்மே. - 4 | இந்திரற்கும்,Indhirarkkum - இந்திரனுக்கும் பிரமற்கும்,Brahmarkkum - ப்ரஹ்மாவுக்கும் முதல்வன் தன்னை,Mudhalvan Thannai - காரணபூதனாய் இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்,Irunilam Kaal Thee Neer Vin Bootham - பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய் செம்திறத்த தமிழ் ஓசை ஆகி,Semthiraththa Tamil Osai Aagi - செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசிக்கப்பித்தவனாய் வடசொல் ஆகி,Vadasol Aagi - ஸம்ஸ்க்ருதவேதத்தையும் பிரகாசிக்கப்பித்தவனாய் திசை நான்கும் ஆய்,Thisai Naangum Aay - நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப்பொருள்களுக்கும் அந்தராத்மாவாய் திங்கள் ஞாயிறு ஆகி,Thingal Gnaayiru Aagi - சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய் அந்தரத்தில்,Andharaththil - இப்படி ஸகலபதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை,Devarkkum Arivial Aagaa Andhananai - தேவர்களுக்கும் அறியக் கூடாத சுத்தஸ்வபாவனாய் அந்தணர் மாடு,Andhanar Maadu - பிரமாணர்கட்குச்செல்வமான வேதத்தினுடைய அந்தி,Andhi - முடிவிலே வைத்த,Vaiththa - விளங்குகிற மந்திரத்தை,Mandhiraththai - பரமமந்த்ரமான ஸர்வேச்வரனை மந்திரத்தால்,Mandhiraththaal - திருமந்த்ரத்தாலே மறவாது வாழுதி ஏல்,Maravaadhu Vaazhudhi yel - இடைவிடாது அநுபவிப்பாயாகில் மட நெஞ்சமே,Mada Nenjchamae - விதேயமான நெஞ்சே! என்றும்,Endrum - இவ்வாத்மா உள்ளவளவும் வாழலாம்,Vaazhlaam - உஜ்ஜீவிக்கப்பெறலாம். |
| 2056 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் “மந்திரத்தால் வாழுதியேல்” என்று திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஸ்மரித்தார்; அதில் நாராயண நாமத்தின் பொருளான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரமாவதாரத்திலே யிட்டு அநுபவிக்கிற பாசுரம் இது. 5 | ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து, எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு, மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. - 5 | ஒரு கால்,Oru Kaal - ஒரு திருவடியானது ஒண் மிதியில்,On Mithiyil - அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில் புனல் உருவி நிற்ப,Punal Uravi Nirpa - ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச்சென்று ஒரு காலும்,Oru Kaalum - (அப்புறம் போக இடம்பெறாமையாலே) நிற்க, மற்றொரு திருவடி காமரு சீர் அவுணன்,Kaamaru Seer Avunan - நல்லபாக்யசாலியான மஹாபலியானவன் உள்ளத்து எண்மதியும் கடந்து,Ullaththu Enmathiyum Kadandhu - தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து அண்டம் மீது போகி எழுந்து,Andam Meedhu Pogi Ezhundhu - அண்டபித்திக்கு மப்பால் செல்லக்கிளம்பி இரு விசும்பின் ஊடு போய்,Iru Visumbin Oodu Poi - பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச்சென்று மேலே தண் மதியும்,Maelae Than Mathiyum - (கதிரவனும் ஸூரியமண்டலத்தையும் ) அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திரமண்டலத்தையும் தவிர ஓடி,Thavira Odi - கடந்து சென்று தாரகையின் புறம் தடவி,Thaaragaiyin Puram Thadavi - (அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ரமண்டலத்தையும் கடந்து அப்பால் மிக்கு,Appaal Mikku - அவ்வருகே பிரமலோகத் தளவும் வியாபித்து நிற்க மண் முழுதும்,Man Muzhuthum - பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும் அகப்படுத்து நின்ற எந்தை,Agappaduththu Nindra Endhai - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட எந்தை,Endhai - எம்பெருமானுடைய மலர் புரையும் திரு அடியே,Malar Puraiyum Thiru Adiyae - தாமரை மலரையொத்த திருவடிகளையே வணங்கினேன்,Vananginaen - வணங்கப்பெற்றேன். |
| 2057 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பேசியநுபவித்தார்; அது என்றைக்கோ கழிந்த அவதாரமிறே; அதற்குத் தாம் பிற்படுகையாலே கண்ணாரக் கண்டு அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வருந்தியிருக்க, இவருடைய வருத்தத்தைக் கண்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அவதாரத்துக்குப் பிற்பட்டவர்களையும் அநுபவிக்கைக்காக வன்றோ நாம் அந்தச் செவ்வியொடே திருக் கோவலூரில் ஸந்நிதி பண்ணி யிருப்பது; அங்கே வந்து குறையற அநுபவிக்கலாமே‘ என்று, உலகளந்த திருக் கோலமாக ஸேவை ஸாதிக்கு மிடமான திருக் கோவலூரைக் காட்டிக் கொடுக்க, ‘நெஞ்சே! நமக்கு வாய்த்தது; அநுபவிக்கப் போகலாம், வா‘ என்றழைக்கிறார். 6 | அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும், சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி, நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி, புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. - 6 | அலம் புரிந்த,Alam Purindha - போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல நெடுந்தடக்கை,Nedunthadakkai - நீண்ட பெரிய திருக்கைகளை யுடையனாய் அமரர் வேந்தன்,Amarar Vendhan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் அம் சிறை புள் தனி பாகன்,Am Sirai Pul Thani Paagan - அழகிய சிறகையுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய் அவுணர்க்கு,Avunarkku - ஆஸுரப்க்ருதிகளுக்கு என்றும்,Endrum - எக்காலத்தும் சலம் புரிந்து,Salm Purindhu - சீற்றங்கொண்டிருந்து அங்கு,Angu - அவர்கள் விஷயத்திலே அருள் இல்லா தன்மை ஆளன் தான்,Arul Illaa Thanmai Aalan Thaan - இரக்கமற்றிருக்கையாகிற் தன்மையையுடையனான் எம்பெருமான் உகந்த,Ugantha - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கிற ஊர் எல்லாம்,Ur Ellaam - திருப்பதிகளிலெல்லாம் தன் தாள்பாடி,Than Thaalpaadi - அவனுடைய திருவடிகளைப் பாடி, நிலம் பரந்து வரும் கலுழி,Nilam Parandhu Varum Kaluzhi - பூமிமுழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தையுடைய பெண்ணை,Pennai - பெண்ணையாறானது ஈர்த்த,Eerththa - (வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டுவருகிற நெடுவேய்கள்,Nedu Vaeykal - பெரிய மூங்கில்களினின்றும் படு,Padu - உண்டாகிற முத்தம்,Muththam - முத்துக்களை உந்த,Undha - வயல்களிலே கொண்டுதள்ள உந்தி,Undhi - (உழவர்களாலும் தங்கள்பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு புலம் பரந்து,Pulam Parandhu - கழனிகளெங்கும் பரவி பொன் விளைக்கும்,Pon Vilaikkum - பொன்னை விளைக்குமிடமாயும் பொய்கை வேலி,Poigai Vaeli - நீர்நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள பூங்கோவலூர்,Poonkovaloor - திருக்கோவலூரை தொழுதும்,Thozhudhum - ஸேவிப்போம்; நெஞ்சே போது,Nenjey Podhu - நெஞ்சே! வா. |
| 2058 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்; அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார். அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி. எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று. ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார். 7 | வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. - 7 | வற்பு உடைய,Varpu Udaiya - மிடுக்குடைய வரை நெடு தோள்,Varai Nedu Thol - மலைபோன்று உயர்ந்த தோள்களையுடையரான மன்னர்,Mannar - (கார்த்த வீரியார்ஜீனன் முதலான) அரசர்கள் மாள,Maala - முடியும்படி வடிவு ஆய,Vadivu Aaya - அழகியதான மழு,Mazhu - கோடாலிப்படையை ஏந்தி,Eaendhi - தரித்து (பரசுராமனாய்த் திருவதரித்தும்) உலகம் ஆண்டு,Ulagam Aandu - (ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும் வெற்பு உடைய,Verpu Udaiya - மலையை உள்ளேயுடைய நெடு கடலுள்,Nedu Kadalul - பெரிய கடலினுள்ளே தனி வேல்,Thani Vaal - ஒப்பற்ற வேற்படையை உய்த்த,Uyththa - செலுத்தின வேள் முதலா,Vael Mudhalaa - ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை வென்றான்,Vendraan - (பாணாஸுரயுத்தத்தில்) தோல்வியடையச் செய்தும் போந்த எம்பெருமான் ஊர்,Oor - எழுந்தருளியிருக்குமிடமாய், விந்தை மேய,Vindhai Maeya - (தவம்புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய் கற்பு உடைய,Karpu Udaiya - அறிவிறசிறந்தவளாய் மடம்,Madam - பற்றினது விடாமையாகிற குணமுடையனான கன்னி,Kanni - துர்க்கையானவள் கடிபொழில் சூழ்,Kadipozhil Soozh - பரிமளத்தையுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய் நெடு மறுகில்,Nedu Marugil - விசாலமான திருவீதிகளை யுடைத்தாய் கமலம் வேலி,Kamalama Vaeli - தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய் பொற்பு உடைய மலை அரையன்,Porpu Udaiya Malai Arayan - பராக்ரமசாலிகளான மலயமா நவர்களாலே ஆச்ரயிக்கப்பட்டதான பூங்கோவலூர்,Poonkovaloor - திருக்கோவலூரை நெஞ்சே தொழு தும்,Nenjchae Thozhu Dhum - மனமே! தொழுவோம்; போது,Podhu - வா |
| 2059 | திரு நெடும் தாண்டகம் || பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார். 8 | நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணி னேனே. - 8 | நீரகத்தாய்,Neeragaththaai - நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே! நெடு வரையின் உச்சி மேலாய்,Nedu Varaiyin Uchi Maelaai - திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே! நிலாத் திங்கள் துண்டத்தாய்,Nilaath Thingal Thundaththaai - நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே! நிறைந்த கச்சி ஊரகத்தாய்,Niraindha Kachchi Ooragaththaai - செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே! ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்,On Thurai Neer Vekkaa Ullai - அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே! உள்ளுவார் உள்ளத்தாய்,Ulluvaar Ullaththaai - சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே! உலகம் ஏத்தும் காரகத்தாய்,Ulagam Eaeththum Kaaragaththaai - உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே; கார்வானத்து உள் ளாய்,Kaarvaanaththu Ullai - திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே! கள்வா,Kalvaa - கள்வனே! காமரு,Kaamaru - விரும்பத்தக்கதாய் பூ,Poo - அழகியதான காவிரியின்,Kaaviriya in - திருக்காவேரியினது தென் பால்,Then Paal - தென் புறத்திலே மன்னு,Mannu - பொருந்தியிருக்கிற பேரகத்தாய்,Peragaththaai - திருப்பேர்நகரில் உறை பவனே! என் நெஞ்சில் பேராது உள்ளாய்,En Nenjil Peraadhu Ullai - எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே! பெருமான்,Perumaan - ஸர்வஸ்வாமியானவனே! உன் திரு அடியே,Un Thiru Adiyae - உனது திருவடிகளையே பேணினேன்,Paeninaen - ஆசைப்படா நின்றேன். |
| 2060 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும் அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும் வாய் வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார். 9 | வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய் மதிள்கச்சி யூராய். பேராய், கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான், பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா, எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழி தரு கேனே. - 9 | வங்கத்தால்,Vangaththaal - கப்பல்களினால் மா மணி,Maa Mani - சிறந்த ரத்னங்களை வந்து,Vandhu - கொண்டு வந்து உந்து,Undhu - தள்ளுமிடமான முந்நீர்,Munnir - கடற்கரையிலுள்ள மல்லையாய்,Mallaiyaai - திருக்கடன் மல்லையில் வாழ்பவனே! மதிள் கச்சி ஊராய்,Mathil Kachchi Ooraai - மதிள்களையுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே! பேராய்,Paeraai - திருப்பேர்நதராளனே! கொங்குஆர்,Kongu Aar - தேன்நிறைந்ததும் வளம்,Valam - செவ்விபெற்றதுமான கொன்றை அலங்கல்,Kondrai Alangal - கொன்றை மாலையை மார்வன்,Maarvan - மார்விலே யுடையனும் குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்,Kulam Varaiyin Madappaavai Idappaal Kondaan - பர்வதராஜபுத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை பங்கத்தாய்,Pangaththaai - (வலது) பக்கத்திலுடையவனே! பால் கடலாய்,Paal Kadal Aai - திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே! பாரின் மேலாய்,Paarin Maelaai - (ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே! பனி வரையின் உச்சியாய்,Pani Varaiyin Uchciyaai - குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே எங்கு உற்றாய்,Engu Utrraai - எங்கிருக்கிறாய்? பவளவண்ணா,Pavala Vannaa - திருப்பவளவண்ணனே! எம்பெருமான்,Emperumaan - எம்பிரானே! ஏழையேன்,Eaazhaiyaen - மிகவும் சபலனாகிய அடியேன் உன்னை நாடி ,Unnai Naadi - உன்னைத் தேடிக்கொண்டு இங்ஙனமே,Ingnganamae - இவ்வண்ணமாகவே உழிதருகேன்,Uzhitharukaen - அலைச்சல்படாநின்றேன். |
| 2061 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானே! பலபடிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழியப் பிறிதொன்றுமறியேன் என்கிறார்- 10 | பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான், என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும் தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே. - 10 | உலகம் ஏத்தும்,Ulagam Yeththum - உலகமடங்கலும் துதிக்கத்தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்றயானை போன்றவனே! வட ஆனாய்,Vada Aanaai - வடதிருவேங்கடத்தில் நின்ற யானைபோன்றவனே! குடபால் ஆனாய்,Kutapaal Aanaai - மேற்றிசையில் (கோயிலில் திருக்கண்வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே! குணபால மதம் யானாய்,Gunapaala Madham Yaanaai - கீழ்த்திசையில் (திருக்கண்ணபுரத்தில்) மதயானைபோன்றவனே! என்றும்,Endrum - எக்காலத்திலும் இமை யோர்க்கு முன்னானாய்,Imai Yoarkku Munnaanaai - நித்யஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே! பின்னானார் வணங்கும் சோதி,Pinnaanaar Vanangum Sothi - அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களத்து ஆனாய்,Thirumoozhikkalaththu Aanaai - திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே! முதல் ஆனாய்,Mudhal Aanaai - முழுமுதற் கடவுளே! பொன் ஆனாய்,Pon Aanaai - பொன் போன்றவனே! பொழில் எழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்,Pozhil Ezum Kaavar Poonda Pugazh Aanaai - ஸப்தலோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்,Igazhvu Aaya Thondanaen Eaazhaiyaen Naan - இகழ்வையே வடிவாகவுடைய தொண்டனாய் அறிவிலியான நான் என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்,En Aanaai En Aanaai Ennaal Allaal - என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது என் அறிவன்,En Arivan - வேறு என்னவென்று சொல்ல அறிவேன்? |
| 2062 | திரு நெடும் தாண்டகம் || இப்பாசுரந் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் தாய் வார்த்தையாகச் செல்லுகின்றன. இவற்றில், ஆழ்வார்க்கு நாயகி யவஸ்தை ஒரு புறத்திலும் தாயின் அவஸ்தை மற்றொரு புறத்திலும் நடக்கிறபடியாலே, எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வார்ககு விரைவு உண்மானமையும் ‘நாம் பதறக்கூடாது‘ என்கிற அத்யவஸாயமும் மற்றொரு புறத்தில் உண்டானமையும் விளங்கும். தன் ஸ்வரூபத்தை நோக்குமளவில் அத்யவஸாயம் உண்டாகும்; அவனுடைய வைலக்ஷண்யத்தை நோக்குமளவில் பதற்றம் உண்டாகும். (பட்டுடுக்குமித்யாதி) பரகால திருத் தாயார் தன் மகளின் நிலைமைகளைக் கண்டு கலங்கி ‘இவளுக்கு இப்படிப்பட்ட அவஸ்தை உண்டானமைக்கு என்ன காரணம்?‘ என்று குறி சொல்லுங் குறத்தியாகிய கட்டுவிச்சி யொருத்தியை வினவ, அவள் ‘எம்பெருமான் படுத்துகிறபாடு இது‘ என்று சொல்ல, அதை வினவ வந்த உறவினர் பாடே சொல்லுகிறாளாய்ச் சொல்லுகிறது இப் பாட்டு 11 | பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள், எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும் மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே? - 11 | பள்ளி கொள்ளான்,Palli Kollaaan - உறங்குகின்றிலன்; என் துணை போது,En Thunai Pothu - ஒரு நொடிப்பொழுதும் என் குடங்கால் இருக்க கில்லாள்,En Kudangkaal Irukka KillaaL - என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்; எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானுடைய திரு அரங்கம்,Thiru Arangam - ஸ்ரீரங்கக்ஷத்ரம் எங்கே என்னும்,Enge Ennum - எங்கிருக்கின்றது? என்கிறாள்; மணி வண்டு,Mani Vandu - அழகிய வண்டுகள் மட்டு விக்கி,Mattu Vikki - (உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ்செய்யப்பெற்ற கூந்தல்,Koondhal - கூந்தலையுடையவளான மட மானை,Mada Maanai - அழகிய மான்போன்ற இப்பெண்பிள்ளையை இது செய்தார் தம்மை,Idhu Seidhaar Thammai - இப்படிப்பட்ட நிலைமையடைவித்தவர் இன்னாரென்பதை, கட்டுவிச்சி,Kattuvichchi - குறிசொல்லுகிறவளே! மெய்யே சொல் என்ன,Meiyye Sol Enna - உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்) கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்,Kadal Vannar Idhu Seidhaar Endru Sonnal - ‘கடல்போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்; நங்காய்,Nangai - நங்கைமீர்களே!, காப்பார் ஆரே,Kaapaar Aare - ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு) இவ்வாகத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறுயாருளர்?. |
| 2063 | திரு நெடும் தாண்டகம் || ழ்ப் பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத் தாயர் வினவ வந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும், எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும் முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது; அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்; அதனை வினவ வந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய். இப் பெண் பிள்ளை நின்ற நிலை இது; இவளுடைய ஸ்வரூப ஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது; இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று. கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை “நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி. 12 | நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள், நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும், அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே. - 12 | நெஞ்சு,Nenju - (இப் பெண்பிள்ளை) மனமானது உருகி,Urugu - நீர்ப்பண்டமாயுருகி கண் பனிப்ப நிற்கும்,Kan Panippa Nirkum - கண்ணீர் பெருக நிற்கின்றாள்; சோரும்,Sorum - மோஹிக்கின்றாள்; நெடிது உயிர்க்கும்,Nedidhu Uyirkkum - பெருமூச்சுவிடுகின்றாள்; உண்டு அறியாள்,Undru AriyaaL - போஜனம் செய்தறியாள்; உறக்கம் பேணாள்,Urakkam PaenaaL - உறங்க விரும்புகின்றிலன்; நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்,Nanju Aravil Thuyil Amarntha Nambee Ennum - விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரைபுரிகின்ற நம்பீ! என்கின்றாள்; வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்,Vambu Aar Poo Vayl Aali Maindhaa Ennum - பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்யயுவாவே! என்கிறாள்; அம் சிறைய புள் கொடியே ஆடும்,Am Siraiya Pul Kodiyae Aaduum - அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்; பாடும்,Paaduum - பாடுகின்றாள்; தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்,Thozhi Ani Arangam Aadudhumo Ennum - ‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்; என் சிறகின் கீழ் அடங்கா,En Siragin Keezh Adangaa - என் கைக்கடங்காத பெண்ணை பெற்றேன்,Pennai Petren - பெண்மகளைப் பெற்ற நான் இரு நிலத்து,Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே ஓர் பழி படைத்தேன்,Or Palzi Padathen - ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்; ஏபாவம்,E Paavam - அந்தோ!. |
| 2064 | திரு நெடும் தாண்டகம் || உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போது போக்குதல் இயல்பு. அப்படியே இப் பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்; அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள். இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன் சொல் மிழற்றும்; இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. தாயானவள் அக் கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும் படியான சில திரு நாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்; ஏவினவிடத்தும் அது பரகால நாயகியின் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு ஒன்றும் வாய் திறக்க மாட்டிற்றில்லை; அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும் அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து ‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல- அது சொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய்– 13 | கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும், வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும், அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும், சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே. - 13 | கல் மாரி,Kal Maari - (இப்பெண்பிள்ளை)(இந்திரன் பெய்வித்த) கல் மழையை கல் எடுத்து,Kal Eduthu - ஒருமலையை யெடுத்துப் பிடித்து காத்தாய் என்றும்,Kaaththaai Endrum - தடுத்தவனே! என்றும், நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்,Naamaru Pookkachi Ooragathaai Endrum - விரும்பத்தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும், அட்டாய் என்றும்,Attaai Endrum - ஒழித்தவனே! என்றும் மாகீண்ட,Maakinda - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த கைத்தலத்து,Kaiththalathu - திருக்கைகளையுடைய என் மைந்தா என்றும்,En Maindhaa Endrum - எனது மைந்தனே! என்றும் தன் கிளியை,Than Kiliyai - தன்னுடைய கிளியை நோக்கி வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்,Vil Iruthu Melliyal Thol Thoindhaai Endrum - வில்லைமுறித்துப் பிராட்டியைக் கைப்பிடித்தவனே! என்றும், வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்,Vekkavil Thuyil Amarntha Vaende Endrum - திருவெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும், அன்று,Andru - முன்பொருகாலத்தில் மல்லரை,Mallarai - மல்லர்களை மல் அடர்த்து,Mal Adarththu - வலிமையடக்கி சொல் எடுத்து,Sol Eduthu - திருநாமத்தின் முதற்சொல்லையெடுத்துக் கொடுத்து சொல் என்று,Sol Endru - (மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி, துணை முலை மேல்,Thunai Mulai Mael - (அது சொல்லத் தொடங்கினவாறே) உபயஸ்தரங்களிலும் துளி சோர,Thuli Soora - கண்ணீர் பெருகப் பெற்று சோர்நின்றாள்,Soornindraal - துவளாநின்றாள். |
| 2065 | திரு நெடும் தாண்டகம் || சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில். ‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்; நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம் என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது. முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி– 14 | முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற, அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை, விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. - 14 | முளை கதிரை,Mulai Kathirai - இளங்கதிரவனைப் போன்றவனும் குறுங்குடியுள்முகிலை,Kurungkutiyul Mukilai - திருக்குறுங்குடியில்காளமேகம் போல் விளங்குபவனும் மூவா மூ உலகும் கடந்து,Muvaa Moo Ulagum Kadandhu - நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அவ்வருகாய் அப்பால்,Appaal - பரமபத்திலே முதல் ஆய் நின்ற,Mudhal Aay Nindra - (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் அளப்பு அரிய,Alappu Ariya - (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடக்கூடாதவனும் ஆர் அமுதை,Aar Amuthai - அருமையான அம்ருதம் போன்றவனும் அரங்கம் மேய அந்தணனை,Arangam Maeya Anthananai - திருவரங்கமாநகரில் பொருந்திய பரமபரிசுத்தனும் அந்தணர்தம் சிந்தையானை,Anthanar Tham Sindhaianai - வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாகவுடையவனும் திருத்தண காவில் விளக்கு ஒளியை,Thiruththana Kaavil Vilakku Oliyai - திருத்தண்காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும் மரகத்தை,Maragaththai - மரகதப்பச்சைப்போல் விரும்பத்தக்க வடிவுபடைத்தவனும் வெஃகாவில் திருமாலை,Vekkaavil Thirumaalai - திருவெஃகாவில் கண்வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான பாட கேட்டு,Paada Kaettu - ஸர்வச்வனை (கிளி) பாட (அப்பாசுரங்களை)க் கேட்டு மட கிளியை,Mada Kiliyai - அழகிய அக்கிளியைநோக்கி வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று,Valarththathanaal Payanpetren Varuga Endru - உன்னைவளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கேவா‘ என்றழைத்து கை கூப்பி வணங்கினாள்,Kai Koopi Vanangginaal - அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள். |
| 2066 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது. 15 | கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும், அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும், சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு, மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. - 15 | கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்,Kal Uyarndha Nedumadil Soozh - கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட கச்சி,Kacchi - காஞ்சீபுரத்திலே கடல் கிடந்த கனி யே என்றும்,Kadal Kidandha Kaniye Endrum - திருப்பதாற்கடலில் கண்வளர்ந்தருளுகிற கனிபோன்ற வனே! என்றும். அல்லி அம் பூ மலர் பொய்கை,Alli Am Poo Malar Poigai - தாதுகள்மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களையுடைய தடாகங்களையும் பழனம்,Pazhanam - நீர்நிலங்களையும் வேலி,Veli - சுற்றும் வேலியாகவுடைய அணி அழுந்தூர்,Ani Alundoor - அழகிய திருவழுந்தூரிலே நின்று,Nindru - நின்றருளி உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்திருக்கின்ற அம்மான் என்றும்,Ammaan Endrum - ஸ்வாமியே! என்று (சொல்லி) சொல் உயர்ந்த,Sol Uyarndha - நாதம் மிக்கிருப்பதாய் நெடு,Nedu - இசை நீண்டிருப்பதான மேய,Meya - எழுந்தருளியிருக்கிற களிறுஎன்றும்,Kaliru Endrum - மதயானை போன்றவனே! என்றும் வீணை,Veenai - வீணையை முலை மேல்,Mulai Mel - தனது தனங்களின் மீது தாங்கி,Thaangi - தாங்கிக் கொண்டு தூ முறுவல்,Thoo Muruval - பரிசுத்தமான மந்தஹாஸத்தாலே நகை,Nagai - பல்வரிசை இறையே தோன்ற,Iraiye Thondra - சிறிதே விளங்கும்படியாக நக்கு,Nakkuu - சிரித்து மெல் விரல்கள்,Mel Viralgal - (தனது) மெல்லியவிரல்கள் சிவப்பு எய்த,Sivappu Eydha - சிவக்கும்படியாக தடவி,Thadavi - (அந்தவீணையைத்) தடவி ஆங்கே,Aange - அதற்குமேலே என்பேதை,En Paedhai - என்பெண்ணானவள் மென் கிளிபோல்,Men Kilipol - கிளிப்பிள்ளைபோலே மிக மிழற்றும்,Miga Mizhatrum - பலபடியாகப் பாடாநின்றாள் |
| 2067 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது. 16 | கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும், மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும், வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும், துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. - 16 | கன்று மேய்த்து,Kanru Meyththu - கன்றுகளை ரக்ஷித்து இனிது உகந்த,Inidhu Ugandha - மிகவும் மகிழ்ச்சி கொண்ட காளாய் என்றும்,Kaalai Endrum - இளையோனே! என்றும், கடி பொழில் சூழ்,Kadi Pozhil Soozh - வாஸனைமிக்க சோலைகளாலே சூழப்பட்ட கணபுரத்து,Kanapurathu - திருக்கண்ணபுரத்திலே (பழுத்த) என் கனியே என்றும்,En Kaniye Endrum - என்பழமே! என்றும் மன்று அமர கூத்து ஆடி,Manru Amara Kooththu Aadi - வீதியாரக் குடக்கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,Magizhndhai Endrum - மகிழ்ந்தவனே! என்றும் வடதிரு வேங்கடம்,Vadathiru Vengadam - வட திருவேங்கடமலையிலே மேய மைந்தா என்றும்,Meya Maindha Endrum - பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும், அசுரர் குலம்,Asurar Kulam - அசுரக் கூட்டங்களை வென்று,Vendru - ஜயித்து களைந்த,Kalaintha - வேரோடொழித்த வேந்தே என்றும்,Vende Endrum - வேந்தனே! என்றும் விரி பொழில் சூழ்,Viri Pozhil Soozh - விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட திருநறையூர்,Thirunaraiyur - திருநறையூரிலே நின்றாய் என்றும்,Nindrai Endrum - நின்றருளுமவனே! என்றும் துன்று குழல் கரு நிறத்து என்துணையே என்றும்,Thunru Kuzhal Karu Nirathu En Thunaie Endrum - அடர்ந்த திருக்குழற் கற்றையையும் கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி துணை முலை மேல்,Thunai Mulai Mel - ஒன்றோடொன்றொத்த தனங்களிலே துளி சோர,Thuli Sora - கண்ணீர்த்துளிகள் பெருகும் படியாக சோர்கின்றாள்,Sorkindraal - தளர்கின்றாள் |
| 2068 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப் பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே தன் பெண் பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார் ‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ‘ என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல; அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதி ப்ரவருத்தியிலே பணைத்த படியைச் சொல்லுகிற பாசுரம் இது. 17 | பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. - 17 | பொங்கு ஆர் மெல் இள கொங்கை,Ila Kongai - வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம் பொன்னே பூப்ப,Ponne Pooppa - வைவர்ணியமடையவும் பொரு கயல் கண்,Poru Kayal Kan - சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள் நீர் அரும்ப,Neer Arumba - நீர்த்துளிகள் அரும்பவும் போந்து நின்று,Pondu Nindru - (வெளியே வந்து) நின்று செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு,Sem Kaal Madam Puravampedaikku Pesum Siru Kuralukku - சிவந்த கால்களையுடைய இளம்புறாக்கள் தம்பேடைகளோடு சிறுகுரலாகப் பேசுகிறபடிக்கு உடல் உருகி,Udal Urugi - மெய் கரைந்து சிந்தித்து,Sindhiththu - (அவன் முறைகெடப்பரிமாறும்படியை) நினைத்து, ஆங்கே,Aangey - அவ்வளவில் தண்காலும்,Than Kaalum - திருத்தண்காலையும் தண் குடந்தை நகரும்,Than Kudandai Nagarum - திருக்குடந்தைப்பதியையும் பாடி,Paadi - (வாயாரப்) பாடி தண் கோவலூர்,Than Kovalur - குளிர்ந்த திருக்கோவலூரையும் பாடி,Paadi - பாடி ஆட,Aada - கூத்தாட கேட்டு,Kaettu - அவ்வொலியை நான்கேட்டு, நங்காய்,Nangai - ‘பெண்ணே! நம் குடிக்கு,Nam Kudikku - நமது குலத்திற்கு இது நன்மையோ என்ன,Idhu Nanmaro Enna - வாய்விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல, நறையூரும்,Naraiyoorum - திருநறையூரையும் பாடுவாள் நவில் கின்றாள்.,Paaduvaal Navil Kindraal - பாடுவாளாகப் பேசத்தொடங்கினாள். |
| 2069 | திரு நெடும் தாண்டகம் || பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய் கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது. ‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘ என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல, மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது, திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது, அவனூர் எங்கேயென்று வினவுவது, நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது, ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய். ‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும், ‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும் ‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும் ‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல். ‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது. ‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று. 18 | கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம், பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன், ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே? - 18 | பாவம் செய்தேன் என்,Paavam Seithen En - பாவியான என்னுடைய ஏர் வண்ணம் பேதை,Er Vannam Paedhai - அழகியவடிவையுடைய பெண்ணானவள் என் சொல் கேளாள்,En Sol Kaelaal - என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை; திருமேனி கார்வண்ணம் என்னும்,Thirumeni Kaarvannam Ennum - (எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்; கண்ணும்,Kannum - (அவனது) திருக்கண்களும் வாயும்,Vaayum - திருவாயும் கைத் தலமும்,Kai Thalamum - திருக்கைகளும் அடி இணையும்,Adi Inaiyum - திருவடியிரண்டும் கமலம் வண்ணம் என்னும்,Kamalama Vannam Ennum - தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்; பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்,Paar Vannam Madamangkai Paththar Ennum - (அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்; பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்,Pani Malar Mael Paavaikku Piththar Ennum - குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார் விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்; எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்,Em Perumaan Thiru Arangam Enge Ennum - என்னை அடிமைப்படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்; நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்,Neer Vannan Neer Malaikke Poven Ennum - நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக்கடவேன் என்கின்றாள்; நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ,Niraivu Azhindhaar Nirkum Aaridhu Anro - அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்! |
| 2070 | திரு நெடும் தாண்டகம் || இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறோ“ என்றாள் கீழ்ப்பாட்டில். அதுகேட்ட பெண்டுகள் ‘இப்படியும் சொல்லிக் கைவிடலாமோநீ? ‘நீ விரும்புகிற புருஷன் வேற்றுப் பெண் பிள்ளைகள் பக்கலிலே சாலவும் ஆழ்ந்து கிடப்பவனாகையாலே அவன் உனக்கு முகந்தரமாட்டான்; வீணாக ஏன் அவனிடத்து நசை வைத்துக் கதறுகின்றாய்?‘ என்று சொல்லியாவது மகளை மீட்கப் பார்க்கலாகாதோ?‘ என்று சொல்ல; ‘அம்மனைமீர்! அதுவுஞ் சொன்னேன்; நான் சொல்வதில் ஒரு குறையுமில்லை; என் உபதேசமெல்லாம் விபரீத பலமாய்விட்டது காணீர்‘ என்கிறாளிதில். 19 | முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி, பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. - 19 | பொருவு அற்றாள் என்மகள்,Poruvu Atrraal En Magal - ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள், முற்று ஆராவனம் முலையாள்,Mutru Aaranam Mulaiyaal - முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும் பாவை,Paavai - சித்திரப்பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி மாயன்,Maayan - அற்புதனான எம்பெருமானுடைய பெற்றேன்,Petrain - பெற்றெடுத்ததாயாகிய நான், வாய் சொல் பேச,Vaai Sol Paesa - (ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல, இறையும்,Iraiyum - சிறிதேனும் கேளாள்,Kaelaal - காதுகொடுத்துங் கேட்பதில்லை; பேர் பாடி,Per Paadi - திருப்பேர்நகரைப் பாடியும் தண் குடந்தை நகர் பாடியும்,Than Kudandhai Nagar Paadiyum - குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும் மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்,Moi Adhalaththul Irupaal Athu Kandum - அழகிய திருமார்பினுள் அடங்கிவாழும்படியைக் கண்டு வைத்தும் அற்றாள்,Atraal - அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்; தன் நிறைவு அழிந்தாள்,Than Niraivu Azhindhaal - தன்னுடைய அடக்கமொழிந்தாள்; ஆவிக்கின்றாள்,Aavikkinraal - நெடுமூச்செறியா நின்றாள்; தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்,Thozi Ani Arangam Aaduthumo Ennum - தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்; பொன் தாமரை கயம்,Pon Thaamarai Kayam - திருப்பொற்றாமரைத் தடாகத்திலே நீர் ஆட,Neer Aada - குடைந்தாடுவதற்கு போனாள்,Ponaal - எழுந்து சென்றாள்; உம் பொன்னும் அஃதே,Um Ponnumm Agadhe - (தோழியர்காள்!) உங்கள் பெண்ணின்படியும் இவ்வண்ணமேயோ? |
| 2071 | திரு நெடும் தாண்டகம் || பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும், வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும், பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும், த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக் கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என் மகளை இந்நிலவுலகத்தில் பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது. 20 | தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி, பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே? - 20 | முன்,Mun - முன்பொருகால் தேர் ஆளும் வாள் அரக்கன்,Ther Aalum Vaal Arakkan - தேர்வீரனும் வாட்படைவல்லவனுமான இராவணனுடைய செல்வம் மாள,Selvam Maala - ஐச்வரியம் அழியவும் தென் இலங்கை மலங்க,Then Ilangkai Malanga - (அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும் செம் தீ ஓங்கி,Sem Thi Oangi - (அனுமானையிட்டு) சிவந்த நெருப்பாலே கொளுத்தி, போர் ஆளன்,Por Aalan - (அதுவன்றியும்) போர்புரியுந் தன்மையனாய் ஆயிரம் தோள்,Aayiram Thol - ஆயிரம்தோள்களை யுடையனான வாணன்,Vaanan - பாணாஸுரன் மாள,Maala - பங்கமடையும்படி செய்தற்கு பொருகடல் அரணை கடந்து,Poru Kadal Aranai Kadandhu - அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து புக்கு,Pukku - பாணபுரத்திற்புகுந்து மிக்க,Mikka - வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும் பார் ஆளன்,Paar Aalan - பூமிக்குநிர்வாஹகனும், பார் இடந்து,Paar Idandhu - (வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும் பாரை உண்டு,Paarai Undu - (பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும் பார் உமிழ்ந்து,Paar Umizhndhu - அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும் பார் அளந்து,Paar Alandhu - (த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும் பாரை ஆண்ட,Paarai Aanda - (ஆக இப்படியெல்லாம்) இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான பேர் ஆளன்,Per Aalan - பெருமை பொருந்தின எம் பெருமானுடைய பேர்,Per - திருநாமங்களை ஓதும்,Oodhum - இடைவிடாமற் சொல்லுகிற பெண்ணை,Pennai - இப்பெண்பிள்ளையை மண் மேல்,Man Mael - இந்நிலவுலகத்தில் பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே,Perunthavathan Endru Allaal Paesalaamae - பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ? |
| 2072 | திரு நெடும் தாண்டகம் || இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது. முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது. இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன. கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப் ‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்; ‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்; இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி, கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து ‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச் சொல்லிப் போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள். அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே, ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள். “இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது. ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு. 21 | மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட, எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே, அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. - 21 | மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ,Mai Vannam Naru Kunjchi Kuzhal Thaazha - தறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய் அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும் இரு பாடு,Iru Paadu - இருபுறத்திலும் மகரம்சேர் குழை,Magaram Saer Kuzhai - மகரகுண்டலங்கள் இலங்கி ஆட,Ilanki Aada - அசைந்துவிளங்கவும் எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ,Ey Vannam Vem Silaiae Thunai Aa - ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு இங்கே,Ingae - இந்தத் திருமணங்கொல்லையிலே இருவர் ஆய் வந்தார்,Iruvar Aay Vandhaar - (தாமும் இளையபெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்; கை,Kai - (அவருடைய) திருக்கைகள் தாமரைவண்ணம்,Thamaraivannam - செந்தாமரைப்பூப்போலு மழகுடையன; வாய்,Vaai - திருப்பவளமும் கமலம் போலும்,Kamalam Polum - தாமரையொக்கும்; கண் இணையும்,Kan Inaiyum - திருக்கண்களும் அரவிந்தம்,Aravindham - அத்தாமரையே அடியும்,Adiyum - திருவடிகளும் அஃதே,Aghdhe - அந்நத் தாமரையே; அவ்வண்ணத்தவர்,Avvannaththavar - அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய நிலைமை,Nilaimai - நிலைமையை கண்டும்,Kandum - கண்டுவைத்தும் தோழீ,Thozhee - தோழியே! அவரை,Avarai - அவரைக் குறித்து தேவர் என்று அஞ்சினோம்,Thaevan Endru Anjinom - பரதேவதையென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே! |
| 2073 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்; அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க, ‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில். அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும், அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே ‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை; சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாப மேயன்றொ: வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ? தாம் உத்தேசித்து வந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை-எவ் வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே, அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்; முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்; நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை; ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒரு பண்ணை நுணுங்கினார்; அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி. 22 | நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும், செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும், எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே. - 22 | ஒன்று,Ondru - மிகச்சிறந்ததான கைவளம்,Kaivalam - கைவளமென்கிற பண்ணை ஆராயா,Aaraayaa - ஆராய்நதுபாடி நம்மை நோக்கா,Nammai Nokka - நம்மைப் பார்த்து இறையே நாணினார் போல்,Iraiyae Naaninaar Pol - சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று பின்னும்,Pinnum - அதற்குப் பிறகும் நயங்கள் செய்வள வில்,Nayangkal Seivala Vil - நயமான வார்த்தைகளையிட்டுப் பண்ணிலே பாடினவளவில் என் மனமும் கண்ணும்,En Manamum Kannum - எனது நெஞ்சம் கண்களும் ஓடி,Odi - பதறிச் சென்று எம்பெருமான் திருஅடிக்கீழ் அணைய,Emperumaan Thiru Adik Keezh Anaiya - அப்பெருமானது திருவடிவாரத்திற்பதிய இப்பால்,Ippaal - அதன்பின் கைவளையும்,Kaivalaiyum - என்கையில் தரித்திருந்த வளைகளையும் மேகலையும்,Megalaiyum - அரையில் மேவிய கலையையும் காணேன்,Kaanaen - காணமாட்டாமல் இழந்தேன்; கனம் மகரத்குழை இரண்டும்,Kanam Magarath Kuzhai Irandum - கனமான மகரகுண்டலங்களிரண்டையும் நான்கு தோளும்,Naangu Tholum - நான்கு திருத்தோள்களையும் காணப்பெற்றேன்; எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு,Emperumaan Kovil Evvalavu Undu Endraerku - (அதன்பிறகு) “தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு எழில் ஆலி இது அன்றோ என்றார்,Ezhil Aali Idhu Andro Endraar - அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார். |
| 2074 | திரு நெடும் தாண்டகம் || தன் பேறாகத் தானே வந்து கலந்தவன் பிரிகிறபோது ‘போக வேண்டா‘ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டிற்றிலையோ? என்று தோழி கேட்க, அது சொல்லாமலிருப்போனோ? அதுவுஞ் சொன்னேன், பலிக்கப் பெற்றதில்லை யென்கிறாள். கலவியிலே உன் கைக்கு அடங்கின சரக்காயிருந்தவர் உன் வார்த்தையை அலக்ஷியஞ் செய்து போவரோ?‘ என்ன, ‘நிலமல்லாத நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாகுமோ‘ என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போகப் போயினாரென்கிறாள். 23 | உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே, தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக் கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது, புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே? - 23 | உன் ஊரும்,Un Oorum - உள்ளுக்குள்ளேயே படரும்படியான சிந்தை நோய்,Sindhai Noi - மனோவியாதியை எனக்கேதந்து,Enakke Thandhu - என்னொருத்திக்கே உண்டாக்கி என் ஒளி வளையும்,En Oli Valaiyum - எனது அழகிய வளைகளையும் மா நிறமும்,Maa Niramum - சிறந்த மேனிநிறத்தையும் இங்கே,Inge - இந்தத் திருமணங் கொல்லையிலே கொண்டார்,Kondaar - கொள்ளைகொண்டு போனார்; (அப்படி அவர் போகிய போது) சேல்,Sel - மீன்களானவை தெள் ஊரும் இளதெங்கின் தேறல் மாந்தி,Thel Oorum Ilathengin Thaeral Maandhi - தெளிவாகப் பெருகுகின்ற இளந்தென்னங் கள்ளைப் பானம் பண்ணி உகளும்,Ugalum - களித்துத் தடித்துத் உலாவா நிற்கப்பெற்ற திரு அரங்கம்,Thiru Arangam - ஸ்ரீரங்கம் நம் ஊர் என்ன,Nam Oor Enna - நமது இருப்பிடம் என்று சொல்லிப்போக, கள் ஊரும் பைந்துழாய் மாலையானை,Kal Oorum Painthuzhai Maalaiyaanai - தேன் வெள்ளமிடாநின்ற பசுமைதங்கிய திருத்துழாய் மாலையையுடைய அப்பெருமானை கனவு இடத்தில் யான் காண்பன்,Kanavu Idaththil Yaan Kaanban - கனவிலே நான் காணப்பெறுகிறேன்; கண்ட போது,Kanda Podhu - அப்படி காணும்போது புள் ஊரும் கள்வா,Pul Oorum Kalvaa - கருடப்பறவையை ஏறிநடந்துகிற கள்வனே! நீபோகேல் என்பன்,Nee Pogael Enban - இனிநீ என்னைவிட்டுப்பிரி்ந்து போகலாகாது என்பேன்; என்றாலும்,Endraalum - அங்ஙனஞ் சொன்னாலும் நமக்கு,Namakku - நமக்கு இது,Idhu - அப்பெருமானது கல்வியானது ஓர் புலவிதானே,Or Pulavidhaanae - வருத்தமேயாய்த் தலைக்கட்டு மது. |
| 2075 | திரு நெடும் தாண்டகம் || “புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவி தானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்; அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டானென்கிறாயே; அந்தப் பெரிய திருவடி தானும் உனக்கு அடங்கினவனல்லனோ? “ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணை யோலை எழுதுவது; ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும் மனைவியர்க்கும் அடிமைப் பட்டிருத்தல் முறைமை யன்றோ; பகவானுக்கு அடிமைப் பட்டபோதே உனக்கும் அடிமைப் பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது; அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக் கூடாதோ?‘ என்று கேட்க; ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்; அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேச வொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!, என் செய்வேன் என்கிறாள். 24 | இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட, பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என் பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே. - 24 | உலகு உண்ட பெரு வாயர்,Ulagu Unda Peru Vaayar - பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும், இங்கே வந்து,Inge Vandhu - இவ்விடத்தே வந்து பொரு கயல்,Poru Kayal - ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற என் கண்,En Kan - எனது கண்களிலிருந்து நீர் அரும்ப,Neer Arumba - நீர்த்துளிகள் துளிக்கும்படி புலவி தந்து,Pulavi Thandhu - விரஹவேதனையை யுண்டாக்கி, இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்,Ilangu Oli Neer Peru Povam Mandi Unda Peru Vaittra Karu Mughil Oppar - விளங்குகின்ற ஓசையை யுடைய நீர்நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெருவயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள் பெருந்தவத்தர் அருதவத்து முனிவர் சூழ,Perunthavaththar Aruthavaththu Munivar Soozha - பரமபக்தியுக்தரான ஸ்ரீவைஷ் ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க ஒரு கையில்,Oru Kaiyil - ஒரு திருக்கையிலே சங்கு,Sangu - திருச்சங்கையும் மற்றொரு கை,Matroru Kai - மற்றொரு திருக்கையிலே ஆழி,Aazhi - திருவாழியையும் ஏந்தி,Enthi - தரித்துக் கொண்டு புனல் அரங்கம் ஊர் என்று,Punal Arangam Oor Endru - நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு போயினார்,Poyinaar - அகன்றுபோனார்; இரு கையில்,Iru Kaiyil - (அதுவே காரணமாக) (எனது) இரண்டு கைகளிலும் சங்கு இவை நில்லா,Sangu Ivai Nillaa - இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன எல்லே பாவம்,Elle Paavam - என்ன மஹாபாபமோ!. |
| 2076 | திரு நெடும் தாண்டகம் || தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்– 25 | மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கு மகரம்சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறையும் என்சிந்தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு, பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே புனலரங்க மூரென்று போயினாரே. - 25 | மின் இலங்கு திரு உருவும்,Min Ilangu Thiru Uruvum - மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும் பெரிய தோளும்,Periya Tholum - பெரிய திருத்தோள்களும் கரி முனிந்த கைத் தலமும்,Kari Munintha Kaith Thalamum - குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும் கண்ணும்,Kannum - திருக்கண்களும் வாயும்,Vaayum - திரு அதரமும் தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே,Than Alarntha Naru Thuzhaai Malarin Keezhe - தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய்மாலையின் கீழே தாழ்ந்து இலங்கு,Thaazhnthu Ilangu - தாழ்ந்து விளங்குகின்ற மகரம் சேர் குழையும்,Magaram Ser Kuzhaiyum - மகர குண்டலங்களுமாகிற இவற்றை காட்டி,Kaatti - ஸேவை ஸாதிப்பித்து என் நலனும்,En Nalanum - என்னுடைய அழகையும் என் நிறைவும்,En Niraivum - என் அடக்கத்தையும் என் சிந்தையும்,En Sindhaiyum - என் நெஞ்சையும் என் வளையும்,En Valaiyum - என் கைவளைகளையும் கொண்டு,Kondu - அபஹரித்துக் கொண்டதுமன்றி என்னை ஆளும் கொண்டு,Ennai Aalum Kondu - என்னை அடிமையாக்கிக் கொண்டு, பொன் அலர்ந்த,Pon Alarntha - பொன் போல் மலர்ந்த நறு,Naru - பரிமளம் மிக்க செருந்தி பொழி லின் ஊடே,Serunthi Pozhilin Oodae - ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினார்,Punal Arangam Oor Endru Poyinaar - நீர்வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய்விட்டார்!. |
| 2077 | திரு நெடும் தாண்டகம் || தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க, அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன. தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்; தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில். ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி– 26 | தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும், பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை, ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று, நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே. - 26 | தேன் மருவு,Then Maruvu - தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற பொழில் இடத்து,Pozhil Idathu - சோலைப்புறத்திலே மலர்ந்த போது,Malarndha Podhu - மலர்ந்த புஷ்பங்களிலுண்டான தேன் அதனை,Then Adhanai - தேனை வாய் மடுத்து,Vaai Maduthu - பானம்பண்ணி உன் பெடையும் நீயும்,Un Peda yum Neeyum - உனது பேடையும் நீயும் பூ மருவி,Poo Maruvi - புஷ்பத்திலே பொருந்தி இனிது அமர்ந்து,Inidhu Amarnthu - இனிமையாகப் புணர்ந்து பொறியின் ஆர்ந்த,Poriyin Aarndha - மேனியிற் புகர் அதிகரிக்கப் பெற்ற அறுகால சிறுவண்டே,Arugaal Siru Vandae - ஆறு கால்களையுடைய சிறிய வண்டே! உன்னை தொழுதேன்,Unnai Thozhuthen - உன்னை வணங்கி யாசிக்கின்றேன்; ஆநிரை,Aanirai - பசுக்கூட்டங்களை மருவிமேய்த்த,Maruvi Maeytha - விரும்பி மேய்த்தவனும் அமரர் கோமான்,Amarar Komaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் அணி அழுந்தூர் நின்றானுக்கு,Ani Alundhoor Nindranukku - அழகிய திருவழுந்தூரிலே நிற்பவனுமான எம்பெருமான் பக்கலிலே இன்றே நீ சென்று,Indrae Nee Senru - இப்போதே நீபோய் அஞ்சாதே,Anjaadhe - பயப்படாமல் மருவி நின்று,Maruvi Nindru - பொருந்தி நின்று ஓர் மாது,Or Maadhu - ஒரு பெண்பிள்ளை நின் நயத்தாள் என்று,Nin Nayaththaal Endru - உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்‘ என்று இறையே,Iraiyae - சிறியதொருவார்த்தையை இயம்பிக்காண்,Iyambikkaan - சொல்லிப்பார். |
| 2078 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும் தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள். “திக்ஷு ஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும் வாநர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள். ராமாவதாரத்திலே வாநர ஜாதி வீறு பெற்றது போலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர். 27 | செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை*நாளும் பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன்*தந்தால் இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே. - 27 | செம் கால,Sem Kaala - சிவந்த கால்களையுடைய மட நாராய்,Mada Naaraay - அழகிய நாரைப்பறவையே! இன்றே சென்று,Indrae Senru - இன்றைக்கே புறப்பட்டுப்போய் திருக்கண்ணபுரம் புக்கு,Thiruk Kannapuram Pukku - திருக்கண்ணபுரத்தில் புகுந்து என் செங்கண் மாலுக்கு,En Senkan Maalukku - செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும் என் துணைவர்க்கு,En Thunaivarkku - எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே என் காதல்,En Kaadhal - எனது விருப்பத்தை உரைத்தி ஆகில்,Uraiththi Aagil - சொல்லுவாயாகில் எமக்கு,Emakku - (அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு இது ஒப்பது இன்பம் இல்லை,Idhu Oppadhu Inbam Illai - (இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;) இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை; |
| 2079 | திரு நெடும் தாண்டகம் || இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு. இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி. 28 | தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால், மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி, என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. - 28 | தோழீ,Thozhee - வாராய் தோழியே!, தென் இலங்கை,Then Ilangai - தென்னிலங்கையிலுள்ள அரண்,Aran - கோட்டைகள் சிதறி,Sithari - அழிந்து அவுணன் மாள,Avunan Maala - இராவணனும் முடியும்படியாக சென்று,Senru - (ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்) உலகம் மூன்றி னையும் திரிந்து,Ulagam Moonrinaiyum Thirindhu - (த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும் மன் இலங்கு,Man Ilangu - அரசர்கள் விளங்காநின்ற பாரதத்தை மாள,Bharathaththai Maala - பாரதயுத்தம் முடியும்படியாக ஓர் தேரால் ஊர்ந்த,Or Thaeraal Oorntha - ஒரு தேரைக் கொண்டு நடத்தின வரை உருவின் மா களிற்றை,Varai Uruvin Maa Kalittrai - மலைபோன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை, என் தன்,En Than - என்னுடைய பொன் இலங்கு முலை குவட்டில்,Pon Ilangu Mulai Kuvattil - பசலைநிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே பூட்டிக்கொண்டு,Pootik Kondu - அணைத்துக்கொண்டு போகாமை வல் லேன் ஆய்,Pogaamai Vallenaay - அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி புலலி எய்தி,Pulali Eythi - அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த,Ennil Angam Ellaam Vandhu Inbam Eytha - என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக எப்பொழுதும்,Eppozhudhum - எல்லாக்காலத்திலும் நான்,Naan - நான் நினைந்து,Ninaindhu - அவரையே சிந்தித்து உருகி இருப்பேன்,Urugi Iruppean - முடிந்து பிழைப்பேன். |
| 2080 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது ‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார். அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார். நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம். 29 | அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை, குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. - 29 | அன்று,Andru - முன் பொருகாலத்தில் ஆயர் குலம் மகளுக்கு,Aayar Kulam Magalukku - இடைக்குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு அரையன் தன்னை,Arayan Thannai - நாயகரானவரும் அலை கடலை கடைந்து,Alai Kadalai Kadaindhu - அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும் அடைத்த அம்மான் தன்னை,Adaitha Ammaan Thannai - (அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும் குன்றாத வலி,Kunraadha Vali - குறைதலில்லாத மிடுக்கை யுடைய அரக்கர் கோனை மாள,Arakkar Konai Maala - இராவணன் முடியும்படியாக கொடும் சிலைவாய்,Kodom Silaivaai - கொடிய வில்லிலே சரம் துரந்து,Saram Thurandhu - அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து குலம் களைந்து வென்றானை,Kulam Kalaindhu Vendraanai - அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும் குன்று எடுத்த,Kunru Eduttha - கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்த தோளினானை,Tholinaanai - புஜத்தையுடையவரும் விரி திரை நீர் விண்ணகரம் மருவி,Viri Thirai Neer Vinnagaram Maruvi - பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி நாளும் நின்றானை,Naalum Ninranaai - எப்போதும் ஸந்நிதிபண்ணி யிருப்பவரும் தண்குடந்தை,Than Kudanthai - குளிர்ந்த திருக்குடந்தை யிலே கிடந்த மாலை,Kidandha Maalai - பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரிதவத்ஸலரும் நெடியானை,Nediyaanaai - ஸர்வோத்தமருமான பெருமானை நாய் அடியேன்,Naai Adiyen - நாய்போல் நீசனான அடியேன் நினைந்திட்டேன்,Ninaindhittaen - நினைத்தேன். |
| 2081 | திரு நெடும் தாண்டகம் || இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது. “பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று பயனுரைக்கும் முகத்தால் அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும். 30 | மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று, அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை, மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே. - 30 | முனிவரோடு அமரர் ஏத்த,Munivarodu Amarar Aettha - முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னம் ஆய் ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமறையை,Arumaraiyai - அருமையான வேதங்களை வெளிப்படுத்த,Velippaduttha - பிரகாசிப்பித்த அம்மான் தன்னை,Ammaan Thannai - ஸர்வேச்வரன் விஷயமாக, மன்னு மாமாணி மாடம்மங்கை வேந்தன்,Mannu Maamaani Maadam Mangai Vaendhan - சாச்வதமான சிறந்த மணிமாடங்களையுடைய திருமங்கைநாட்டுக்குத் தலைவரும் மானம் வேல்,Maanam Vael - பெருமைதங்கிய வேற்படையை யுடைவரும் கலியன்,Kaliyan - திருமங்கையாழ்வார் மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா,Minnum Maa Mazhai Thavazhum Megam Vannaa - ‘மின்னலோடுகூடியும் மிகவும் குளிர்ந்தும் தவழ்ந்து வருகின்றமேகம் போன்ற வடிவையுடையவனே! விண்ணவர் தம் பெருமானே,Vinnavar Tham Perumaanae - தேவாதி தேவனே! அருளாய்,Arulaai - அருள்புரியவேணும் என்று சொன்ன,Endru Sonnna - என்று பிரார்த்தித்து அருளிச் செய்த பன்னிய,Panniya - மிகவும் பரம்பின தமிழ் நூல்,Tamil Nool - தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற மாலை,Maalai - இச் சொல்மாலையை வல்லார் தாம்,Vallaar Thaam - ஓதவல்லவர்கள் தொல்லை,Tollai - அநாதியான பழ வினையை,Pazha Vinaiyai - முன்னே வினைகளை முதல்,Mudhal - வேரோடே அரிய வல்லார்,Ariya Vallaar - களைந்தொழிக்க வல்லவராவர். |