Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2053 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2053திரு நெடும் தாண்டகம் || அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளிடத்தும் ஸாம்யபுத்தி நடப்பதாகிற ஒரு அநர்த்தமுண்டே, அந்த அநர்த்தத்தையும் எம்பெருமான் தமக்குப் போக்கியருளின படியைப் பேசுகிறார் இப்பாட்டில். 2
பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே - 2
ஏர் உருவில்,Er Uruvil - அழகிற ஜகத்தில்
மூவருமே என்ன நின்ற,Moovarumae Enna Nindra - மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த
இமையவர் தம்,Imaiyavar Tham - தேவதைகளினுடைய
திரு உரு,Thiru Uru - ரூபங்களை
வேறு எண்ணும் போது,Veru Ennum Podhu - தனித்தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்
ஓர் உருவம்,Or Uruvam - (நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது
பொன் உருவம்,Pon Uruvam - பொன்னின் வடிவாகவுள்ளது;
ஒன்று,Onru - (பரம சிவனாகிற) ஒருமூர்த்தி யானது
செம் தீ,Sem Thee - சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது;
ஒன்று,Onru - (ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது
மா கடல் உருவம்,Maa Kadal Uruvam - கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது;
ஒத்து நின்ற,Othu Nindra - சேர்ந்திருக்கின்ற
மூ உருவும்,Moo Uruvum - (மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும்
கண்ட போது,Kanda Podhu - (பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து,
பார் உருவி,Paar Uravi - கடினமான பூமியென்ன
நீர்,Neer - ஜலமென்ன
எரி,Eri - அக்நியென்ன
கால்,Kaal - வாயுவென்ன
விசும்பும் ஆகி,Visumbum Aagi - ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்
பல்வேறு சமயமும் ஆய்,Palveru Samayamum Aay - பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
பரந்து நின்ற,Parandhu Nindra - இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய்
ஆம் சோதி,Aam Sothi - பரஞ்சோதியென்று போற்றப் படுமதாய்
ஒன்று,Onru - அத்விதீயமா யிருக்கின்ற
முகில் உருவம்,Mugil Uruvam - காளமேக வுருவமானது
எம் அடிகள் உருவம்,Em Adigal Uruvam - எம்பெருமானுடைய வடிவமாம்