| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2054 | திரு நெடும் தாண்டகம் || திரிமூர்த்தி ஸாம்ய ப்ரமத்தை எம்பெருமான் தமக்குப் போக்கித் தந்தருளின படியை அருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில். எம்பெருமான் தனது நிர்ஹேதுக க்ருபையினால் தமக்குக் காட்டித் தந்தருளின திருமேனியின் வைலக்ஷண்யத்தை அநுபவித்துப் பேசுகிறார் இப்பாட்டில். 3 | திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக் கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும், பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை, ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால், கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே? - 3 | திரு வடிவில்,Thiru Vadivil - விலக்ஷணமான வடிவுகளில், கருநெடுமால்,Karunedumaal - காளமேகச்யாமமான வடிவை பெரு வடிவின்,Peru Vadivin - பெரிய கூர்மரூபத்தோடே கடல்,Kadal - கடலினின்றும் அமுதம் கொண்ட காலம்,Amudham Konda Kaalam - (தேவர்களுக்கு) அமுதமெடுத்துக்கொடுத்த காலமாகிய கிருதயுகத்திலே வளைஉரு ஆய் திகழ் ந்தான் என்றும்,Valai Uru Aay Thigalndhaan Endrum - சங்குபோலே வெளுத்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்றும் திரேதைக்கண்,Thirethaikkan - த்ரேதாயுகத்திலே சேயன் என்றும்,Saeyan Endrum - சிவந்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்றும் கரு நீலம் வண்ணன் என்றும்,Karu Neelam Vannan Endrum - (கலியுகத்தில்)(இயற்கையான) நீலநிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும் ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்,Oozhi Thoru Oozhi Nindru Eaeththal Allaalaal - எப்போதும் நின்று துதிப்பதல்லாமல் ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா,Oru Vadivam Endru Or Uru Endru Unaral Aagaa - வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப்போகாமலிருக்கிற கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை,Karu Vadivin Semvannam Kannan Thannai Perumaanai - கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக்கண்களையுமுடையனான எம்பெருமானை யார் ஒருவர்,Yaar Oruvar - ஆரேனுமொருவர் காண்கிற்,Kaankir paarae - (ஸ்வப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ? கட்டுரை,Katturai - (நெஞ்சே!) சொல்லு. |