| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2055 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானைத் தாம் ஒருவராக அநுபவிப்பதில் த்ருப்தி பிறவாமையாலே உசாத் துணை கூட்டிக் கொள்ள விருப்பமுண்டாயிற்று ஆழ்வார்க்கு; முக்தர்களும் நித்யர்களும் இந்நிலத்தவ ரல்லாமையாலே அவர்கள் துணையாகப் பெற்றதில்லை; இந் நிலத்தவரான ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடும் அவர்களாகையாலும் துணையாக மாட்டார்கள்; இனி ஒரு போதும் தம்மை விட்டுப் பிரியாதிருக்கிற தமது திருவுள்ள மொன்றே தமக்குத் துணையாகவற்றாதலால் ‘நெஞ்சே! இவ் விஷயத்தை நாம் அநுபவிக்கும் படி பாராய்‘ என்கிறார். 4 | இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய், செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி, அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சம்மே. - 4 | இந்திரற்கும்,Indhirarkkum - இந்திரனுக்கும் பிரமற்கும்,Brahmarkkum - ப்ரஹ்மாவுக்கும் முதல்வன் தன்னை,Mudhalvan Thannai - காரணபூதனாய் இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்,Irunilam Kaal Thee Neer Vin Bootham - பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய் செம்திறத்த தமிழ் ஓசை ஆகி,Semthiraththa Tamil Osai Aagi - செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசிக்கப்பித்தவனாய் வடசொல் ஆகி,Vadasol Aagi - ஸம்ஸ்க்ருதவேதத்தையும் பிரகாசிக்கப்பித்தவனாய் திசை நான்கும் ஆய்,Thisai Naangum Aay - நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப்பொருள்களுக்கும் அந்தராத்மாவாய் திங்கள் ஞாயிறு ஆகி,Thingal Gnaayiru Aagi - சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய் அந்தரத்தில்,Andharaththil - இப்படி ஸகலபதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை,Devarkkum Arivial Aagaa Andhananai - தேவர்களுக்கும் அறியக் கூடாத சுத்தஸ்வபாவனாய் அந்தணர் மாடு,Andhanar Maadu - பிரமாணர்கட்குச்செல்வமான வேதத்தினுடைய அந்தி,Andhi - முடிவிலே வைத்த,Vaiththa - விளங்குகிற மந்திரத்தை,Mandhiraththai - பரமமந்த்ரமான ஸர்வேச்வரனை மந்திரத்தால்,Mandhiraththaal - திருமந்த்ரத்தாலே மறவாது வாழுதி ஏல்,Maravaadhu Vaazhudhi yel - இடைவிடாது அநுபவிப்பாயாகில் மட நெஞ்சமே,Mada Nenjchamae - விதேயமான நெஞ்சே! என்றும்,Endrum - இவ்வாத்மா உள்ளவளவும் வாழலாம்,Vaazhlaam - உஜ்ஜீவிக்கப்பெறலாம். |