| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2056 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் “மந்திரத்தால் வாழுதியேல்” என்று திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஸ்மரித்தார்; அதில் நாராயண நாமத்தின் பொருளான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரமாவதாரத்திலே யிட்டு அநுபவிக்கிற பாசுரம் இது. 5 | ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து, எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு, மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. - 5 | ஒரு கால்,Oru Kaal - ஒரு திருவடியானது ஒண் மிதியில்,On Mithiyil - அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில் புனல் உருவி நிற்ப,Punal Uravi Nirpa - ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச்சென்று ஒரு காலும்,Oru Kaalum - (அப்புறம் போக இடம்பெறாமையாலே) நிற்க, மற்றொரு திருவடி காமரு சீர் அவுணன்,Kaamaru Seer Avunan - நல்லபாக்யசாலியான மஹாபலியானவன் உள்ளத்து எண்மதியும் கடந்து,Ullaththu Enmathiyum Kadandhu - தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து அண்டம் மீது போகி எழுந்து,Andam Meedhu Pogi Ezhundhu - அண்டபித்திக்கு மப்பால் செல்லக்கிளம்பி இரு விசும்பின் ஊடு போய்,Iru Visumbin Oodu Poi - பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச்சென்று மேலே தண் மதியும்,Maelae Than Mathiyum - (கதிரவனும் ஸூரியமண்டலத்தையும் ) அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திரமண்டலத்தையும் தவிர ஓடி,Thavira Odi - கடந்து சென்று தாரகையின் புறம் தடவி,Thaaragaiyin Puram Thadavi - (அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ரமண்டலத்தையும் கடந்து அப்பால் மிக்கு,Appaal Mikku - அவ்வருகே பிரமலோகத் தளவும் வியாபித்து நிற்க மண் முழுதும்,Man Muzhuthum - பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும் அகப்படுத்து நின்ற எந்தை,Agappaduththu Nindra Endhai - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட எந்தை,Endhai - எம்பெருமானுடைய மலர் புரையும் திரு அடியே,Malar Puraiyum Thiru Adiyae - தாமரை மலரையொத்த திருவடிகளையே வணங்கினேன்,Vananginaen - வணங்கப்பெற்றேன். |