Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2057 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2057திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பேசியநுபவித்தார்; அது என்றைக்கோ கழிந்த அவதாரமிறே; அதற்குத் தாம் பிற்படுகையாலே கண்ணாரக் கண்டு அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வருந்தியிருக்க, இவருடைய வருத்தத்தைக் கண்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அவதாரத்துக்குப் பிற்பட்டவர்களையும் அநுபவிக்கைக்காக வன்றோ நாம் அந்தச் செவ்வியொடே திருக் கோவலூரில் ஸந்நிதி பண்ணி யிருப்பது; அங்கே வந்து குறையற அநுபவிக்கலாமே‘ என்று, உலகளந்த திருக் கோலமாக ஸேவை ஸாதிக்கு மிடமான திருக் கோவலூரைக் காட்டிக் கொடுக்க, ‘நெஞ்சே! நமக்கு வாய்த்தது; அநுபவிக்கப் போகலாம், வா‘ என்றழைக்கிறார். 6
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. - 6
அலம் புரிந்த,Alam Purindha - போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல
நெடுந்தடக்கை,Nedunthadakkai - நீண்ட பெரிய திருக்கைகளை யுடையனாய்
அமரர் வேந்தன்,Amarar Vendhan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
அம் சிறை புள் தனி பாகன்,Am Sirai Pul Thani Paagan - அழகிய சிறகையுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய்
அவுணர்க்கு,Avunarkku - ஆஸுரப்க்ருதிகளுக்கு
என்றும்,Endrum - எக்காலத்தும்
சலம் புரிந்து,Salm Purindhu - சீற்றங்கொண்டிருந்து
அங்கு,Angu - அவர்கள் விஷயத்திலே
அருள் இல்லா தன்மை ஆளன் தான்,Arul Illaa Thanmai Aalan Thaan - இரக்கமற்றிருக்கையாகிற் தன்மையையுடையனான் எம்பெருமான்
உகந்த,Ugantha - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கிற
ஊர் எல்லாம்,Ur Ellaam - திருப்பதிகளிலெல்லாம்
தன் தாள்பாடி,Than Thaalpaadi - அவனுடைய திருவடிகளைப் பாடி,
நிலம் பரந்து வரும் கலுழி,Nilam Parandhu Varum Kaluzhi - பூமிமுழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தையுடைய
பெண்ணை,Pennai - பெண்ணையாறானது
ஈர்த்த,Eerththa - (வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டுவருகிற
நெடுவேய்கள்,Nedu Vaeykal - பெரிய மூங்கில்களினின்றும்
படு,Padu - உண்டாகிற
முத்தம்,Muththam - முத்துக்களை
உந்த,Undha - வயல்களிலே கொண்டுதள்ள
உந்தி,Undhi - (உழவர்களாலும் தங்கள்பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு
புலம் பரந்து,Pulam Parandhu - கழனிகளெங்கும் பரவி
பொன் விளைக்கும்,Pon Vilaikkum - பொன்னை விளைக்குமிடமாயும்
பொய்கை வேலி,Poigai Vaeli - நீர்நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள
பூங்கோவலூர்,Poonkovaloor - திருக்கோவலூரை
தொழுதும்,Thozhudhum - ஸேவிப்போம்;
நெஞ்சே போது,Nenjey Podhu - நெஞ்சே! வா.