| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2058 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்; அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார். அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி. எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று. ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார். 7 | வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. - 7 | வற்பு உடைய,Varpu Udaiya - மிடுக்குடைய வரை நெடு தோள்,Varai Nedu Thol - மலைபோன்று உயர்ந்த தோள்களையுடையரான மன்னர்,Mannar - (கார்த்த வீரியார்ஜீனன் முதலான) அரசர்கள் மாள,Maala - முடியும்படி வடிவு ஆய,Vadivu Aaya - அழகியதான மழு,Mazhu - கோடாலிப்படையை ஏந்தி,Eaendhi - தரித்து (பரசுராமனாய்த் திருவதரித்தும்) உலகம் ஆண்டு,Ulagam Aandu - (ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும் வெற்பு உடைய,Verpu Udaiya - மலையை உள்ளேயுடைய நெடு கடலுள்,Nedu Kadalul - பெரிய கடலினுள்ளே தனி வேல்,Thani Vaal - ஒப்பற்ற வேற்படையை உய்த்த,Uyththa - செலுத்தின வேள் முதலா,Vael Mudhalaa - ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை வென்றான்,Vendraan - (பாணாஸுரயுத்தத்தில்) தோல்வியடையச் செய்தும் போந்த எம்பெருமான் ஊர்,Oor - எழுந்தருளியிருக்குமிடமாய், விந்தை மேய,Vindhai Maeya - (தவம்புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய் கற்பு உடைய,Karpu Udaiya - அறிவிறசிறந்தவளாய் மடம்,Madam - பற்றினது விடாமையாகிற குணமுடையனான கன்னி,Kanni - துர்க்கையானவள் கடிபொழில் சூழ்,Kadipozhil Soozh - பரிமளத்தையுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய் நெடு மறுகில்,Nedu Marugil - விசாலமான திருவீதிகளை யுடைத்தாய் கமலம் வேலி,Kamalama Vaeli - தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய் பொற்பு உடைய மலை அரையன்,Porpu Udaiya Malai Arayan - பராக்ரமசாலிகளான மலயமா நவர்களாலே ஆச்ரயிக்கப்பட்டதான பூங்கோவலூர்,Poonkovaloor - திருக்கோவலூரை நெஞ்சே தொழு தும்,Nenjchae Thozhu Dhum - மனமே! தொழுவோம்; போது,Podhu - வா |