Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2059 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2059திரு நெடும் தாண்டகம் || பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார். 8
நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணி னேனே. - 8
நீரகத்தாய்,Neeragaththaai - நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய்,Nedu Varaiyin Uchi Maelaai - திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய்,Nilaath Thingal Thundaththaai - நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய்,Niraindha Kachchi Ooragaththaai - செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்,On Thurai Neer Vekkaa Ullai - அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய்,Ulluvaar Ullaththaai - சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய்,Ulagam Eaeththum Kaaragaththaai - உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே;
கார்வானத்து உள் ளாய்,Kaarvaanaththu Ullai - திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா,Kalvaa - கள்வனே!
காமரு,Kaamaru - விரும்பத்தக்கதாய்
பூ,Poo - அழகியதான
காவிரியின்,Kaaviriya in - திருக்காவேரியினது
தென் பால்,Then Paal - தென் புறத்திலே
மன்னு,Mannu - பொருந்தியிருக்கிற
பேரகத்தாய்,Peragaththaai - திருப்பேர்நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய்,En Nenjil Peraadhu Ullai - எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே!
பெருமான்,Perumaan - ஸர்வஸ்வாமியானவனே!
உன் திரு அடியே,Un Thiru Adiyae - உனது திருவடிகளையே
பேணினேன்,Paeninaen - ஆசைப்படா நின்றேன்.