| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2061 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானே! பலபடிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழியப் பிறிதொன்றுமறியேன் என்கிறார்- 10 | பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான், என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும் தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே. - 10 | உலகம் ஏத்தும்,Ulagam Yeththum - உலகமடங்கலும் துதிக்கத்தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்றயானை போன்றவனே! வட ஆனாய்,Vada Aanaai - வடதிருவேங்கடத்தில் நின்ற யானைபோன்றவனே! குடபால் ஆனாய்,Kutapaal Aanaai - மேற்றிசையில் (கோயிலில் திருக்கண்வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே! குணபால மதம் யானாய்,Gunapaala Madham Yaanaai - கீழ்த்திசையில் (திருக்கண்ணபுரத்தில்) மதயானைபோன்றவனே! என்றும்,Endrum - எக்காலத்திலும் இமை யோர்க்கு முன்னானாய்,Imai Yoarkku Munnaanaai - நித்யஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே! பின்னானார் வணங்கும் சோதி,Pinnaanaar Vanangum Sothi - அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களத்து ஆனாய்,Thirumoozhikkalaththu Aanaai - திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே! முதல் ஆனாய்,Mudhal Aanaai - முழுமுதற் கடவுளே! பொன் ஆனாய்,Pon Aanaai - பொன் போன்றவனே! பொழில் எழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்,Pozhil Ezum Kaavar Poonda Pugazh Aanaai - ஸப்தலோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்,Igazhvu Aaya Thondanaen Eaazhaiyaen Naan - இகழ்வையே வடிவாகவுடைய தொண்டனாய் அறிவிலியான நான் என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்,En Aanaai En Aanaai Ennaal Allaal - என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது என் அறிவன்,En Arivan - வேறு என்னவென்று சொல்ல அறிவேன்? |