Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2062 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2062திரு நெடும் தாண்டகம் || இப்பாசுரந் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் தாய் வார்த்தையாகச் செல்லுகின்றன. இவற்றில், ஆழ்வார்க்கு நாயகி யவஸ்தை ஒரு புறத்திலும் தாயின் அவஸ்தை மற்றொரு புறத்திலும் நடக்கிறபடியாலே, எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வார்ககு விரைவு உண்மானமையும் ‘நாம் பதறக்கூடாது‘ என்கிற அத்யவஸாயமும் மற்றொரு புறத்தில் உண்டானமையும் விளங்கும். தன் ஸ்வரூபத்தை நோக்குமளவில் அத்யவஸாயம் உண்டாகும்; அவனுடைய வைலக்ஷண்யத்தை நோக்குமளவில் பதற்றம் உண்டாகும். (பட்டுடுக்குமித்யாதி) பரகால திருத் தாயார் தன் மகளின் நிலைமைகளைக் கண்டு கலங்கி ‘இவளுக்கு இப்படிப்பட்ட அவஸ்தை உண்டானமைக்கு என்ன காரணம்?‘ என்று குறி சொல்லுங் குறத்தியாகிய கட்டுவிச்சி யொருத்தியை வினவ, அவள் ‘எம்பெருமான் படுத்துகிறபாடு இது‘ என்று சொல்ல, அதை வினவ வந்த உறவினர் பாடே சொல்லுகிறாளாய்ச் சொல்லுகிறது இப் பாட்டு 11
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே? - 11
பள்ளி கொள்ளான்,Palli Kollaaan - உறங்குகின்றிலன்;
என் துணை போது,En Thunai Pothu - ஒரு நொடிப்பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்,En Kudangkaal Irukka KillaaL - என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானுடைய
திரு அரங்கம்,Thiru Arangam - ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்,Enge Ennum - எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு,Mani Vandu - அழகிய வண்டுகள்
மட்டு விக்கி,Mattu Vikki - (உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ்செய்யப்பெற்ற
கூந்தல்,Koondhal - கூந்தலையுடையவளான
மட மானை,Mada Maanai - அழகிய மான்போன்ற இப்பெண்பிள்ளையை
இது செய்தார் தம்மை,Idhu Seidhaar Thammai - இப்படிப்பட்ட நிலைமையடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி,Kattuvichchi - குறிசொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன,Meiyye Sol Enna - உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்,Kadal Vannar Idhu Seidhaar Endru Sonnal - ‘கடல்போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்,Nangai - நங்கைமீர்களே!,
காப்பார் ஆரே,Kaapaar Aare - ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு) இவ்வாகத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறுயாருளர்?.