Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2063 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2063திரு நெடும் தாண்டகம் || ழ்ப் பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத் தாயர் வினவ வந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும், எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும் முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது; அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்; அதனை வினவ வந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய். இப் பெண் பிள்ளை நின்ற நிலை இது; இவளுடைய ஸ்வரூப ஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது; இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று. கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை “நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி. 12
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே. - 12
நெஞ்சு,Nenju - (இப் பெண்பிள்ளை) மனமானது
உருகி,Urugu - நீர்ப்பண்டமாயுருகி
கண் பனிப்ப நிற்கும்,Kan Panippa Nirkum - கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்,Sorum - மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்,Nedidhu Uyirkkum - பெருமூச்சுவிடுகின்றாள்;
உண்டு அறியாள்,Undru AriyaaL - போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்,Urakkam PaenaaL - உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்,Nanju Aravil Thuyil Amarntha Nambee Ennum - விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரைபுரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்,Vambu Aar Poo Vayl Aali Maindhaa Ennum - பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்யயுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்,Am Siraiya Pul Kodiyae Aaduum - அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்,Paaduum - பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்,Thozhi Ani Arangam Aadudhumo Ennum - ‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா,En Siragin Keezh Adangaa - என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்,Pennai Petren - பெண்மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து,Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்,Or Palzi Padathen - ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்,E Paavam - அந்தோ!.