Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2065 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2065திரு நெடும் தாண்டகம் || சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில். ‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்; நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம் என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது. முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி– 14
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. - 14
முளை கதிரை,Mulai Kathirai - இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள்முகிலை,Kurungkutiyul Mukilai - திருக்குறுங்குடியில்காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து,Muvaa Moo Ulagum Kadandhu - நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்,Appaal - பரமபத்திலே
முதல் ஆய் நின்ற,Mudhal Aay Nindra - (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளியிருப்பவனும்
அளப்பு அரிய,Alappu Ariya - (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடக்கூடாதவனும்
ஆர் அமுதை,Aar Amuthai - அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை,Arangam Maeya Anthananai - திருவரங்கமாநகரில் பொருந்திய பரமபரிசுத்தனும்
அந்தணர்தம் சிந்தையானை,Anthanar Tham Sindhaianai - வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாகவுடையவனும்
திருத்தண காவில் விளக்கு ஒளியை,Thiruththana Kaavil Vilakku Oliyai - திருத்தண்காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை,Maragaththai - மரகதப்பச்சைப்போல் விரும்பத்தக்க வடிவுபடைத்தவனும்
வெஃகாவில் திருமாலை,Vekkaavil Thirumaalai - திருவெஃகாவில் கண்வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு,Paada Kaettu - ஸர்வச்வனை (கிளி) பாட (அப்பாசுரங்களை)க் கேட்டு
மட கிளியை,Mada Kiliyai - அழகிய அக்கிளியைநோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று,Valarththathanaal Payanpetren Varuga Endru - உன்னைவளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கேவா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்,Kai Koopi Vanangginaal - அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.