| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2066 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது. 15 | கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும், அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும், சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு, மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. - 15 | கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்,Kal Uyarndha Nedumadil Soozh - கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட கச்சி,Kacchi - காஞ்சீபுரத்திலே கடல் கிடந்த கனி யே என்றும்,Kadal Kidandha Kaniye Endrum - திருப்பதாற்கடலில் கண்வளர்ந்தருளுகிற கனிபோன்ற வனே! என்றும். அல்லி அம் பூ மலர் பொய்கை,Alli Am Poo Malar Poigai - தாதுகள்மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களையுடைய தடாகங்களையும் பழனம்,Pazhanam - நீர்நிலங்களையும் வேலி,Veli - சுற்றும் வேலியாகவுடைய அணி அழுந்தூர்,Ani Alundoor - அழகிய திருவழுந்தூரிலே நின்று,Nindru - நின்றருளி உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்திருக்கின்ற அம்மான் என்றும்,Ammaan Endrum - ஸ்வாமியே! என்று (சொல்லி) சொல் உயர்ந்த,Sol Uyarndha - நாதம் மிக்கிருப்பதாய் நெடு,Nedu - இசை நீண்டிருப்பதான மேய,Meya - எழுந்தருளியிருக்கிற களிறுஎன்றும்,Kaliru Endrum - மதயானை போன்றவனே! என்றும் வீணை,Veenai - வீணையை முலை மேல்,Mulai Mel - தனது தனங்களின் மீது தாங்கி,Thaangi - தாங்கிக் கொண்டு தூ முறுவல்,Thoo Muruval - பரிசுத்தமான மந்தஹாஸத்தாலே நகை,Nagai - பல்வரிசை இறையே தோன்ற,Iraiye Thondra - சிறிதே விளங்கும்படியாக நக்கு,Nakkuu - சிரித்து மெல் விரல்கள்,Mel Viralgal - (தனது) மெல்லியவிரல்கள் சிவப்பு எய்த,Sivappu Eydha - சிவக்கும்படியாக தடவி,Thadavi - (அந்தவீணையைத்) தடவி ஆங்கே,Aange - அதற்குமேலே என்பேதை,En Paedhai - என்பெண்ணானவள் மென் கிளிபோல்,Men Kilipol - கிளிப்பிள்ளைபோலே மிக மிழற்றும்,Miga Mizhatrum - பலபடியாகப் பாடாநின்றாள் |