Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2067 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2067திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது. 16
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும்,
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்,
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும்,
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. - 16
கன்று மேய்த்து,Kanru Meyththu - கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த,Inidhu Ugandha - மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்,Kaalai Endrum - இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்,Kadi Pozhil Soozh - வாஸனைமிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கணபுரத்து,Kanapurathu - திருக்கண்ணபுரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்,En Kaniye Endrum - என்பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி,Manru Amara Kooththu Aadi - வீதியாரக் குடக்கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்,Magizhndhai Endrum - மகிழ்ந்தவனே! என்றும்
வடதிரு வேங்கடம்,Vadathiru Vengadam - வட திருவேங்கடமலையிலே
மேய மைந்தா என்றும்,Meya Maindha Endrum - பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்,Asurar Kulam - அசுரக் கூட்டங்களை
வென்று,Vendru - ஜயித்து
களைந்த,Kalaintha - வேரோடொழித்த
வேந்தே என்றும்,Vende Endrum - வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்,Viri Pozhil Soozh - விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்,Thirunaraiyur - திருநறையூரிலே
நின்றாய் என்றும்,Nindrai Endrum - நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என்துணையே என்றும்,Thunru Kuzhal Karu Nirathu En Thunaie Endrum - அடர்ந்த திருக்குழற் கற்றையையும் கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்,Thunai Mulai Mel - ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர,Thuli Sora - கண்ணீர்த்துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்,Sorkindraal - தளர்கின்றாள்