| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2068 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப் பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே தன் பெண் பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார் ‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ‘ என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல; அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதி ப்ரவருத்தியிலே பணைத்த படியைச் சொல்லுகிற பாசுரம் இது. 17 | பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. - 17 | பொங்கு ஆர் மெல் இள கொங்கை,Ila Kongai - வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம் பொன்னே பூப்ப,Ponne Pooppa - வைவர்ணியமடையவும் பொரு கயல் கண்,Poru Kayal Kan - சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள் நீர் அரும்ப,Neer Arumba - நீர்த்துளிகள் அரும்பவும் போந்து நின்று,Pondu Nindru - (வெளியே வந்து) நின்று செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு,Sem Kaal Madam Puravampedaikku Pesum Siru Kuralukku - சிவந்த கால்களையுடைய இளம்புறாக்கள் தம்பேடைகளோடு சிறுகுரலாகப் பேசுகிறபடிக்கு உடல் உருகி,Udal Urugi - மெய் கரைந்து சிந்தித்து,Sindhiththu - (அவன் முறைகெடப்பரிமாறும்படியை) நினைத்து, ஆங்கே,Aangey - அவ்வளவில் தண்காலும்,Than Kaalum - திருத்தண்காலையும் தண் குடந்தை நகரும்,Than Kudandai Nagarum - திருக்குடந்தைப்பதியையும் பாடி,Paadi - (வாயாரப்) பாடி தண் கோவலூர்,Than Kovalur - குளிர்ந்த திருக்கோவலூரையும் பாடி,Paadi - பாடி ஆட,Aada - கூத்தாட கேட்டு,Kaettu - அவ்வொலியை நான்கேட்டு, நங்காய்,Nangai - ‘பெண்ணே! நம் குடிக்கு,Nam Kudikku - நமது குலத்திற்கு இது நன்மையோ என்ன,Idhu Nanmaro Enna - வாய்விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல, நறையூரும்,Naraiyoorum - திருநறையூரையும் பாடுவாள் நவில் கின்றாள்.,Paaduvaal Navil Kindraal - பாடுவாளாகப் பேசத்தொடங்கினாள். |