| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2069 | திரு நெடும் தாண்டகம் || பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய் கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது. ‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘ என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல, மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது, திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது, அவனூர் எங்கேயென்று வினவுவது, நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது, ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய். ‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும், ‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும் ‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும் ‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல். ‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது. ‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று. 18 | கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம், பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன், ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே? - 18 | பாவம் செய்தேன் என்,Paavam Seithen En - பாவியான என்னுடைய ஏர் வண்ணம் பேதை,Er Vannam Paedhai - அழகியவடிவையுடைய பெண்ணானவள் என் சொல் கேளாள்,En Sol Kaelaal - என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை; திருமேனி கார்வண்ணம் என்னும்,Thirumeni Kaarvannam Ennum - (எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்; கண்ணும்,Kannum - (அவனது) திருக்கண்களும் வாயும்,Vaayum - திருவாயும் கைத் தலமும்,Kai Thalamum - திருக்கைகளும் அடி இணையும்,Adi Inaiyum - திருவடியிரண்டும் கமலம் வண்ணம் என்னும்,Kamalama Vannam Ennum - தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்; பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்,Paar Vannam Madamangkai Paththar Ennum - (அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்; பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்,Pani Malar Mael Paavaikku Piththar Ennum - குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார் விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்; எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்,Em Perumaan Thiru Arangam Enge Ennum - என்னை அடிமைப்படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்; நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்,Neer Vannan Neer Malaikke Poven Ennum - நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக்கடவேன் என்கின்றாள்; நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ,Niraivu Azhindhaar Nirkum Aaridhu Anro - அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்! |