Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2070 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2070திரு நெடும் தாண்டகம் || இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறோ“ என்றாள் கீழ்ப்பாட்டில். அதுகேட்ட பெண்டுகள் ‘இப்படியும் சொல்லிக் கைவிடலாமோநீ? ‘நீ விரும்புகிற புருஷன் வேற்றுப் பெண் பிள்ளைகள் பக்கலிலே சாலவும் ஆழ்ந்து கிடப்பவனாகையாலே அவன் உனக்கு முகந்தரமாட்டான்; வீணாக ஏன் அவனிடத்து நசை வைத்துக் கதறுகின்றாய்?‘ என்று சொல்லியாவது மகளை மீட்கப் பார்க்கலாகாதோ?‘ என்று சொல்ல; ‘அம்மனைமீர்! அதுவுஞ் சொன்னேன்; நான் சொல்வதில் ஒரு குறையுமில்லை; என் உபதேசமெல்லாம் விபரீத பலமாய்விட்டது காணீர்‘ என்கிறாளிதில். 19
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

- 19
பொருவு அற்றாள் என்மகள்,Poruvu Atrraal En Magal - ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள்,
முற்று ஆராவனம் முலையாள்,Mutru Aaranam Mulaiyaal - முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும்
பாவை,Paavai - சித்திரப்பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மாயன்,Maayan - அற்புதனான எம்பெருமானுடைய
பெற்றேன்,Petrain - பெற்றெடுத்ததாயாகிய நான்,
வாய் சொல் பேச,Vaai Sol Paesa - (ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல,
இறையும்,Iraiyum - சிறிதேனும்
கேளாள்,Kaelaal - காதுகொடுத்துங் கேட்பதில்லை;
பேர் பாடி,Per Paadi - திருப்பேர்நகரைப் பாடியும்
தண் குடந்தை நகர் பாடியும்,Than Kudandhai Nagar Paadiyum - குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்,Moi Adhalaththul Irupaal Athu Kandum - அழகிய திருமார்பினுள் அடங்கிவாழும்படியைக் கண்டு வைத்தும்
அற்றாள்,Atraal - அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்;
தன் நிறைவு அழிந்தாள்,Than Niraivu Azhindhaal - தன்னுடைய அடக்கமொழிந்தாள்;
ஆவிக்கின்றாள்,Aavikkinraal - நெடுமூச்செறியா நின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்,Thozi Ani Arangam Aaduthumo Ennum - தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்;
பொன் தாமரை கயம்,Pon Thaamarai Kayam - திருப்பொற்றாமரைத் தடாகத்திலே
நீர் ஆட,Neer Aada - குடைந்தாடுவதற்கு
போனாள்,Ponaal - எழுந்து சென்றாள்;
உம் பொன்னும் அஃதே,Um Ponnumm Agadhe - (தோழியர்காள்!) உங்கள் பெண்ணின்படியும் இவ்வண்ணமேயோ?