Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2071 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2071திரு நெடும் தாண்டகம் || பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும், வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும், பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும், த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக் கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என் மகளை இந்நிலவுலகத்தில் பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது. 20
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே? - 20
முன்,Mun - முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்,Ther Aalum Vaal Arakkan - தேர்வீரனும் வாட்படைவல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள,Selvam Maala - ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க,Then Ilangkai Malanga - (அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
செம் தீ ஓங்கி,Sem Thi Oangi - (அனுமானையிட்டு) சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
போர் ஆளன்,Por Aalan - (அதுவன்றியும்) போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்,Aayiram Thol - ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன்,Vaanan - பாணாஸுரன்
மாள,Maala - பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து,Poru Kadal Aranai Kadandhu - அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு,Pukku - பாணபுரத்திற்புகுந்து
மிக்க,Mikka - வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்,Paar Aalan - பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து,Paar Idandhu - (வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு,Paarai Undu - (பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து,Paar Umizhndhu - அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து,Paar Alandhu - (த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
பாரை ஆண்ட,Paarai Aanda - (ஆக இப்படியெல்லாம்) இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்,Per Aalan - பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
ஓதும்,Oodhum - இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை,Pennai - இப்பெண்பிள்ளையை
மண் மேல்,Man Mael - இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே,Perunthavathan Endru Allaal Paesalaamae - பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?