Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2073 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2073திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்; அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க, ‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில். அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும், அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே ‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை; சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாப மேயன்றொ: வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ? தாம் உத்தேசித்து வந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை-எவ் வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே, அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்; முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்; நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை; ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒரு பண்ணை நுணுங்கினார்; அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி. 22
நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.

- 22
ஒன்று,Ondru - மிகச்சிறந்ததான
கைவளம்,Kaivalam - கைவளமென்கிற பண்ணை
ஆராயா,Aaraayaa - ஆராய்நதுபாடி
நம்மை நோக்கா,Nammai Nokka - நம்மைப் பார்த்து
இறையே நாணினார் போல்,Iraiyae Naaninaar Pol - சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று
பின்னும்,Pinnum - அதற்குப் பிறகும்
நயங்கள் செய்வள வில்,Nayangkal Seivala Vil - நயமான வார்த்தைகளையிட்டுப் பண்ணிலே பாடினவளவில்
என் மனமும் கண்ணும்,En Manamum Kannum - எனது நெஞ்சம் கண்களும்
ஓடி,Odi - பதறிச் சென்று
எம்பெருமான் திருஅடிக்கீழ் அணைய,Emperumaan Thiru Adik Keezh Anaiya - அப்பெருமானது திருவடிவாரத்திற்பதிய
இப்பால்,Ippaal - அதன்பின்
கைவளையும்,Kaivalaiyum - என்கையில் தரித்திருந்த வளைகளையும்
மேகலையும்,Megalaiyum - அரையில் மேவிய கலையையும்
காணேன்,Kaanaen - காணமாட்டாமல் இழந்தேன்;
கனம் மகரத்குழை இரண்டும்,Kanam Magarath Kuzhai Irandum - கனமான மகரகுண்டலங்களிரண்டையும்
நான்கு தோளும்,Naangu Tholum - நான்கு திருத்தோள்களையும் காணப்பெற்றேன்;
எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு,Emperumaan Kovil Evvalavu Undu Endraerku - (அதன்பிறகு) “தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு
எழில் ஆலி இது அன்றோ என்றார்,Ezhil Aali Idhu Andro Endraar - அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார்.