Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2074 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2074திரு நெடும் தாண்டகம் || தன் பேறாகத் தானே வந்து கலந்தவன் பிரிகிறபோது ‘போக வேண்டா‘ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டிற்றிலையோ? என்று தோழி கேட்க, அது சொல்லாமலிருப்போனோ? அதுவுஞ் சொன்னேன், பலிக்கப் பெற்றதில்லை யென்கிறாள். கலவியிலே உன் கைக்கு அடங்கின சரக்காயிருந்தவர் உன் வார்த்தையை அலக்ஷியஞ் செய்து போவரோ?‘ என்ன, ‘நிலமல்லாத நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாகுமோ‘ என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போகப் போயினாரென்கிறாள். 23
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே? - 23
உன் ஊரும்,Un Oorum - உள்ளுக்குள்ளேயே படரும்படியான
சிந்தை நோய்,Sindhai Noi - மனோவியாதியை
எனக்கேதந்து,Enakke Thandhu - என்னொருத்திக்கே உண்டாக்கி
என் ஒளி வளையும்,En Oli Valaiyum - எனது அழகிய வளைகளையும்
மா நிறமும்,Maa Niramum - சிறந்த மேனிநிறத்தையும்
இங்கே,Inge - இந்தத் திருமணங் கொல்லையிலே
கொண்டார்,Kondaar - கொள்ளைகொண்டு போனார்; (அப்படி அவர் போகிய போது)
சேல்,Sel - மீன்களானவை
தெள் ஊரும் இளதெங்கின் தேறல் மாந்தி,Thel Oorum Ilathengin Thaeral Maandhi - தெளிவாகப் பெருகுகின்ற இளந்தென்னங் கள்ளைப் பானம் பண்ணி
உகளும்,Ugalum - களித்துத் தடித்துத் உலாவா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்,Thiru Arangam - ஸ்ரீரங்கம்
நம் ஊர் என்ன,Nam Oor Enna - நமது இருப்பிடம் என்று சொல்லிப்போக,
கள் ஊரும் பைந்துழாய் மாலையானை,Kal Oorum Painthuzhai Maalaiyaanai - தேன் வெள்ளமிடாநின்ற பசுமைதங்கிய திருத்துழாய் மாலையையுடைய அப்பெருமானை
கனவு இடத்தில் யான் காண்பன்,Kanavu Idaththil Yaan Kaanban - கனவிலே நான் காணப்பெறுகிறேன்;
கண்ட போது,Kanda Podhu - அப்படி காணும்போது
புள் ஊரும் கள்வா,Pul Oorum Kalvaa - கருடப்பறவையை ஏறிநடந்துகிற கள்வனே!
நீபோகேல் என்பன்,Nee Pogael Enban - இனிநீ என்னைவிட்டுப்பிரி்ந்து போகலாகாது என்பேன்;
என்றாலும்,Endraalum - அங்ஙனஞ் சொன்னாலும்
நமக்கு,Namakku - நமக்கு
இது,Idhu - அப்பெருமானது கல்வியானது
ஓர் புலவிதானே,Or Pulavidhaanae - வருத்தமேயாய்த் தலைக்கட்டு மது.