| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2075 | திரு நெடும் தாண்டகம் || “புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவி தானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்; அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டானென்கிறாயே; அந்தப் பெரிய திருவடி தானும் உனக்கு அடங்கினவனல்லனோ? “ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணை யோலை எழுதுவது; ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும் மனைவியர்க்கும் அடிமைப் பட்டிருத்தல் முறைமை யன்றோ; பகவானுக்கு அடிமைப் பட்டபோதே உனக்கும் அடிமைப் பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது; அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக் கூடாதோ?‘ என்று கேட்க; ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்; அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேச வொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!, என் செய்வேன் என்கிறாள். 24 | இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட, பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என் பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே. - 24 | உலகு உண்ட பெரு வாயர்,Ulagu Unda Peru Vaayar - பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும், இங்கே வந்து,Inge Vandhu - இவ்விடத்தே வந்து பொரு கயல்,Poru Kayal - ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற என் கண்,En Kan - எனது கண்களிலிருந்து நீர் அரும்ப,Neer Arumba - நீர்த்துளிகள் துளிக்கும்படி புலவி தந்து,Pulavi Thandhu - விரஹவேதனையை யுண்டாக்கி, இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்,Ilangu Oli Neer Peru Povam Mandi Unda Peru Vaittra Karu Mughil Oppar - விளங்குகின்ற ஓசையை யுடைய நீர்நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெருவயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள் பெருந்தவத்தர் அருதவத்து முனிவர் சூழ,Perunthavaththar Aruthavaththu Munivar Soozha - பரமபக்தியுக்தரான ஸ்ரீவைஷ் ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க ஒரு கையில்,Oru Kaiyil - ஒரு திருக்கையிலே சங்கு,Sangu - திருச்சங்கையும் மற்றொரு கை,Matroru Kai - மற்றொரு திருக்கையிலே ஆழி,Aazhi - திருவாழியையும் ஏந்தி,Enthi - தரித்துக் கொண்டு புனல் அரங்கம் ஊர் என்று,Punal Arangam Oor Endru - நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு போயினார்,Poyinaar - அகன்றுபோனார்; இரு கையில்,Iru Kaiyil - (அதுவே காரணமாக) (எனது) இரண்டு கைகளிலும் சங்கு இவை நில்லா,Sangu Ivai Nillaa - இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன எல்லே பாவம்,Elle Paavam - என்ன மஹாபாபமோ!. |