| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2076 | திரு நெடும் தாண்டகம் || தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்– 25 | மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கு மகரம்சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறையும் என்சிந்தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு, பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே புனலரங்க மூரென்று போயினாரே. - 25 | மின் இலங்கு திரு உருவும்,Min Ilangu Thiru Uruvum - மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும் பெரிய தோளும்,Periya Tholum - பெரிய திருத்தோள்களும் கரி முனிந்த கைத் தலமும்,Kari Munintha Kaith Thalamum - குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும் கண்ணும்,Kannum - திருக்கண்களும் வாயும்,Vaayum - திரு அதரமும் தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே,Than Alarntha Naru Thuzhaai Malarin Keezhe - தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய்மாலையின் கீழே தாழ்ந்து இலங்கு,Thaazhnthu Ilangu - தாழ்ந்து விளங்குகின்ற மகரம் சேர் குழையும்,Magaram Ser Kuzhaiyum - மகர குண்டலங்களுமாகிற இவற்றை காட்டி,Kaatti - ஸேவை ஸாதிப்பித்து என் நலனும்,En Nalanum - என்னுடைய அழகையும் என் நிறைவும்,En Niraivum - என் அடக்கத்தையும் என் சிந்தையும்,En Sindhaiyum - என் நெஞ்சையும் என் வளையும்,En Valaiyum - என் கைவளைகளையும் கொண்டு,Kondu - அபஹரித்துக் கொண்டதுமன்றி என்னை ஆளும் கொண்டு,Ennai Aalum Kondu - என்னை அடிமையாக்கிக் கொண்டு, பொன் அலர்ந்த,Pon Alarntha - பொன் போல் மலர்ந்த நறு,Naru - பரிமளம் மிக்க செருந்தி பொழி லின் ஊடே,Serunthi Pozhilin Oodae - ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினார்,Punal Arangam Oor Endru Poyinaar - நீர்வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய்விட்டார்!. |