Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2077 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2077திரு நெடும் தாண்டகம் || தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க, அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன. தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்; தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில். ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி– 26
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே. - 26
தேன் மருவு,Then Maruvu - தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற
பொழில் இடத்து,Pozhil Idathu - சோலைப்புறத்திலே
மலர்ந்த போது,Malarndha Podhu - மலர்ந்த புஷ்பங்களிலுண்டான
தேன் அதனை,Then Adhanai - தேனை
வாய் மடுத்து,Vaai Maduthu - பானம்பண்ணி
உன் பெடையும் நீயும்,Un Peda yum Neeyum - உனது பேடையும் நீயும்
பூ மருவி,Poo Maruvi - புஷ்பத்திலே பொருந்தி
இனிது அமர்ந்து,Inidhu Amarnthu - இனிமையாகப் புணர்ந்து
பொறியின் ஆர்ந்த,Poriyin Aarndha - மேனியிற் புகர் அதிகரிக்கப் பெற்ற
அறுகால சிறுவண்டே,Arugaal Siru Vandae - ஆறு கால்களையுடைய சிறிய வண்டே!
உன்னை தொழுதேன்,Unnai Thozhuthen - உன்னை வணங்கி யாசிக்கின்றேன்;
ஆநிரை,Aanirai - பசுக்கூட்டங்களை
மருவிமேய்த்த,Maruvi Maeytha - விரும்பி மேய்த்தவனும்
அமரர் கோமான்,Amarar Komaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
அணி அழுந்தூர் நின்றானுக்கு,Ani Alundhoor Nindranukku - அழகிய திருவழுந்தூரிலே நிற்பவனுமான எம்பெருமான் பக்கலிலே
இன்றே நீ சென்று,Indrae Nee Senru - இப்போதே நீபோய்
அஞ்சாதே,Anjaadhe - பயப்படாமல்
மருவி நின்று,Maruvi Nindru - பொருந்தி நின்று
ஓர் மாது,Or Maadhu - ஒரு பெண்பிள்ளை
நின் நயத்தாள் என்று,Nin Nayaththaal Endru - உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்‘ என்று
இறையே,Iraiyae - சிறியதொருவார்த்தையை
இயம்பிக்காண்,Iyambikkaan - சொல்லிப்பார்.