| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2078 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும் தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள். “திக்ஷு ஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும் வாநர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள். ராமாவதாரத்திலே வாநர ஜாதி வீறு பெற்றது போலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர். 27 | செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை*நாளும் பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன்*தந்தால் இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே. - 27 | செம் கால,Sem Kaala - சிவந்த கால்களையுடைய மட நாராய்,Mada Naaraay - அழகிய நாரைப்பறவையே! இன்றே சென்று,Indrae Senru - இன்றைக்கே புறப்பட்டுப்போய் திருக்கண்ணபுரம் புக்கு,Thiruk Kannapuram Pukku - திருக்கண்ணபுரத்தில் புகுந்து என் செங்கண் மாலுக்கு,En Senkan Maalukku - செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும் என் துணைவர்க்கு,En Thunaivarkku - எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே என் காதல்,En Kaadhal - எனது விருப்பத்தை உரைத்தி ஆகில்,Uraiththi Aagil - சொல்லுவாயாகில் எமக்கு,Emakku - (அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு இது ஒப்பது இன்பம் இல்லை,Idhu Oppadhu Inbam Illai - (இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;) இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை; |