Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2079 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2079திரு நெடும் தாண்டகம் || இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு. இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி. 28
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.

- 28
தோழீ,Thozhee - வாராய் தோழியே!,
தென் இலங்கை,Then Ilangai - தென்னிலங்கையிலுள்ள
அரண்,Aran - கோட்டைகள்
சிதறி,Sithari - அழிந்து
அவுணன் மாள,Avunan Maala - இராவணனும் முடியும்படியாக
சென்று,Senru - (ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றி னையும் திரிந்து,Ulagam Moonrinaiyum Thirindhu - (த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு,Man Ilangu - அரசர்கள் விளங்காநின்ற
பாரதத்தை மாள,Bharathaththai Maala - பாரதயுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த,Or Thaeraal Oorntha - ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை,Varai Uruvin Maa Kalittrai - மலைபோன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்,En Than - என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்,Pon Ilangu Mulai Kuvattil - பசலைநிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக்கொண்டு,Pootik Kondu - அணைத்துக்கொண்டு
போகாமை வல் லேன் ஆய்,Pogaamai Vallenaay - அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி,Pulali Eythi - அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த,Ennil Angam Ellaam Vandhu Inbam Eytha - என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்,Eppozhudhum - எல்லாக்காலத்திலும்
நான்,Naan - நான்
நினைந்து,Ninaindhu - அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்,Urugi Iruppean - முடிந்து பிழைப்பேன்.