Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2080 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2080திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது ‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார். அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார். நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம். 29
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. - 29
அன்று,Andru - முன் பொருகாலத்தில்
ஆயர் குலம் மகளுக்கு,Aayar Kulam Magalukku - இடைக்குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு
அரையன் தன்னை,Arayan Thannai - நாயகரானவரும்
அலை கடலை கடைந்து,Alai Kadalai Kadaindhu - அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்
அடைத்த அம்மான் தன்னை,Adaitha Ammaan Thannai - (அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்
குன்றாத வலி,Kunraadha Vali - குறைதலில்லாத மிடுக்கை யுடைய
அரக்கர் கோனை மாள,Arakkar Konai Maala - இராவணன் முடியும்படியாக
கொடும் சிலைவாய்,Kodom Silaivaai - கொடிய வில்லிலே
சரம் துரந்து,Saram Thurandhu - அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து
குலம் களைந்து வென்றானை,Kulam Kalaindhu Vendraanai - அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும்
குன்று எடுத்த,Kunru Eduttha - கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்த
தோளினானை,Tholinaanai - புஜத்தையுடையவரும்
விரி திரை நீர் விண்ணகரம் மருவி,Viri Thirai Neer Vinnagaram Maruvi - பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி
நாளும் நின்றானை,Naalum Ninranaai - எப்போதும் ஸந்நிதிபண்ணி யிருப்பவரும்
தண்குடந்தை,Than Kudanthai - குளிர்ந்த திருக்குடந்தை யிலே
கிடந்த மாலை,Kidandha Maalai - பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரிதவத்ஸலரும்
நெடியானை,Nediyaanaai - ஸர்வோத்தமருமான பெருமானை
நாய் அடியேன்,Naai Adiyen - நாய்போல் நீசனான அடியேன்
நினைந்திட்டேன்,Ninaindhittaen - நினைத்தேன்.