Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2081 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2081திரு நெடும் தாண்டகம் || இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது. “பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று பயனுரைக்கும் முகத்தால் அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும். 30
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல்
தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே. - 30
முனிவரோடு அமரர் ஏத்த,Munivarodu Amarar Aettha - முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னம் ஆய் ஹம்ஸரூபியாய் அவதரித்து
அருமறையை,Arumaraiyai - அருமையான வேதங்களை
வெளிப்படுத்த,Velippaduttha - பிரகாசிப்பித்த
அம்மான் தன்னை,Ammaan Thannai - ஸர்வேச்வரன் விஷயமாக,
மன்னு மாமாணி மாடம்மங்கை வேந்தன்,Mannu Maamaani Maadam Mangai Vaendhan - சாச்வதமான சிறந்த மணிமாடங்களையுடைய திருமங்கைநாட்டுக்குத் தலைவரும்
மானம் வேல்,Maanam Vael - பெருமைதங்கிய வேற்படையை யுடைவரும்
கலியன்,Kaliyan - திருமங்கையாழ்வார்
மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா,Minnum Maa Mazhai Thavazhum Megam Vannaa - ‘மின்னலோடுகூடியும் மிகவும் குளிர்ந்தும் தவழ்ந்து வருகின்றமேகம் போன்ற வடிவையுடையவனே!
விண்ணவர் தம் பெருமானே,Vinnavar Tham Perumaanae - தேவாதி தேவனே!
அருளாய்,Arulaai - அருள்புரியவேணும்
என்று சொன்ன,Endru Sonnna - என்று பிரார்த்தித்து அருளிச் செய்த
பன்னிய,Panniya - மிகவும் பரம்பின
தமிழ் நூல்,Tamil Nool - தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற
மாலை,Maalai - இச் சொல்மாலையை
வல்லார் தாம்,Vallaar Thaam - ஓதவல்லவர்கள்
தொல்லை,Tollai - அநாதியான
பழ வினையை,Pazha Vinaiyai - முன்னே வினைகளை
முதல்,Mudhal - வேரோடே
அரிய வல்லார்,Ariya Vallaar - களைந்தொழிக்க வல்லவராவர்.