திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2082 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2082முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி இவை தன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி அவ் வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில் இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும் ஜலத்தின் உடைய த்ரவத்தையும் தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து – நித்ய விபூதி அடங்க உப லஷணமாக திரு வாழி ஆழ்வானைச் சொல்லி ஆக இத்தனையாலும் உபய விபூதி யுக்தன் என்னும் இடத்தைச் சொல்லி இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்- தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கையாலே இவர் செய்தது எல்லாம் தனக்கு அலங்காரமாகவும் போக்யமாகவும் நினைத்து இருக்கிற படியையும் சொல்லி இப்படிப் பட்ட அடிமை செய்யப் பெறாமையாலே வந்த ஸ்வரூப ஹானியைப் பரிஹரிக்கைக்காக – அடிக்கே சூட்டினேன் சொன் மாலை -என்றதாதல் அன்றிக்கே இங்கனே இருப்பதோர் அறிவு நடையாடாமையாலே சம்சாரம் இங்கனே நித்யமாய்ச் சொல்லுகிறது என்று பார்த்து அதுக்காக செய்தாராய் இருக்கிறது – 1
வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடர் ஆழி நீங்குகவே யென்று
பதவுரை Show / Hide
வையம் தகளி ஆ,Vaiyam Thagali Aa - பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக,Vaar Kadaley Ney Aaga - அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக,Veyya Kathiron Vilakku Aaga - உஷ்ணகிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே,Seyya Sudar Azhiyan Adikke - செஞ்சுடர்ச் சக்கரைக்கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை,Sol Maalai - இப்பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன்,Soottineen - சாத்தினேன்;
இடர் ஆழி நீங்குக என்று,Idar Aazhi Neenguga Endru - (ஏதுக்காகவென்னில்;) (பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.