| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | முதல் திருவந்தாதி - தனியன் || (கைதைசேர்) 28 | கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு வையத் தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற் றந்தாதி படிவிளங்கச் செய்தான் பரிந்து | Kaithai, கைதை - தாழைகள் Ser, சேர் - நெருங்கிவர்த்திக்கிற Poo, பூ - அழகிய Pozhil, பொழில் - சோலைகளாலே Soozh, சூழ் - சூழப்பட்ட Kachi nagar, கச்சி நகர் - காஞ்சீநகரத்தில் (திருவெஃகாவிலே) Vandhudiththa, வந்துதித்த - (பொற்றாமரைப் பொய்கையிலே) திருவவதரித்தவராய் Kavingar poreru, கவிஞர்போரேறு - கவி ச்ரேஷ்டராய் Poigai piran, பொய்கைப் பிரான் - உபகாரகரான பொய்கையாழ்வார் Vaiyathu, வையத்து - பூமியிலுள்ள Adiyavargal, அடியவர்கள் - தாஸபூதரான ஸ்ரீவைஷ்ணவர்கள் Vaazha, வாழ - வாழும்படிக்கீடாக Arum, அரும் - (அர்த்த நிர்ணயம் செய்யப்புகில்) அரிதாய் Tamizh, தமிழ் - தமிழாகையாலே ஸுலபமாய் Nootranthaadhi, நூற்றந்தாதி - நூறுபாட்டாயிருக்கிற அந்தாதியை Parinthu, பரிந்து - ஸ்நேஹ யுக்தராய்க்கொண்டு Padi, படி - பூமியிலே Vilanga seidhaan, விளங்கச்செய்தான் - ப்ரகாசமாகும்படி செய்தருளினார் |
| 2082 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி இவை தன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி அவ் வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில் இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும் ஜலத்தின் உடைய த்ரவத்தையும் தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து – நித்ய விபூதி அடங்க உப லஷணமாக திரு வாழி ஆழ்வானைச் சொல்லி ஆக இத்தனையாலும் உபய விபூதி யுக்தன் என்னும் இடத்தைச் சொல்லி இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்- தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கையாலே இவர் செய்தது எல்லாம் தனக்கு அலங்காரமாகவும் போக்யமாகவும் நினைத்து இருக்கிற படியையும் சொல்லி இப்படிப் பட்ட அடிமை செய்யப் பெறாமையாலே வந்த ஸ்வரூப ஹானியைப் பரிஹரிக்கைக்காக – அடிக்கே சூட்டினேன் சொன் மாலை -என்றதாதல் அன்றிக்கே இங்கனே இருப்பதோர் அறிவு நடையாடாமையாலே சம்சாரம் இங்கனே நித்யமாய்ச் சொல்லுகிறது என்று பார்த்து அதுக்காக செய்தாராய் இருக்கிறது – 1 | வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடர் ஆழி நீங்குகவே யென்று | வையம் தகளி ஆ,Vaiyam Thagali Aa - பூமி அகலாகவும் வார் கடலே நெய் ஆக,Vaar Kadaley Ney Aaga - அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும். வெய்ய கதிரோன் விளக்கு ஆக,Veyya Kathiron Vilakku Aaga - உஷ்ணகிரணனான ஸூர்யன் விளக்காகவும், செய்ய சுடர் ஆழியான் அடிக்கே,Seyya Sudar Azhiyan Adikke - செஞ்சுடர்ச் சக்கரைக்கையனான எம்பெருமானது திருவடிகளில். சொல் மாலை,Sol Maalai - இப்பாமாலையகிற பூ மாலையை சூட்டினேன்,Soottineen - சாத்தினேன்; இடர் ஆழி நீங்குக என்று,Idar Aazhi Neenguga Endru - (ஏதுக்காகவென்னில்;) (பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக. |
| 2083 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2 | என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது, ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். | கடல் கடைந்தது,Kadal Kadaindhathu - (தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது |
| 2083 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2 | என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் | என்று,Enru - எந்த நாள்? நீர் ஏற்றது,Neer Aetrathu - (மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது எ உலகம்,E Ulagam - எந்த உலகம்? அதனை,Adhanai - அவற்றை நான் ஒன்றும் உணரேன்,Naan Ondrum Unaraen - நான் அடியோடு அரிகின்றிலேன்; அது,Adhu - அந்தக் கடலானது அன்று,Andru - ஸ்ரீராமாவதார காலத்தில் அடைத்து,Adaiththu - மலைகளைக்கொண்டு திருவணைகட்டித் தூர்த்து உடைத்து,Udaiththu - (இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து. கண்படுத்த,Kanpadutha - எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற ஆழி,Aazhi - ஸமுத்ரமாம்; இது,Idhu - (நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது நீ,Nee - ஸர்வேச்வரனான உன்னாலே படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டிக்கப்பட்டும் இடந்து,Idandhu - (வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும் உண்டு,Undu - (பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும் உமிழ்ந்த,Umizhndha - பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான பார்,Paar - பூமியாகும். |
| 2084 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வோவ பதானங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு அதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதா என்கிறார் 3 | பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீயளவு கண்ட நெறி | ஓர் அடி,Oor Adi - ஒரு திருவடியை பார் அளவும் வைத்து,Paar Alavum Vaiththu - பூமிப்பரப்பு உள்ளவரையிலும் போரும்படி வைக்க ஓர் அடியும்,Oru Adiyum - மற்றொரு திருவடியும் பார் உடுத்த,Paar Uduththa - இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற நீர் அளவும்,Neer Alavum - ஆவரண ஜலம் வரையில் செல்ல,Sella - செல்லும்படி நிமிர்ந்தது,Nimirndhadhu - ஓங்கிற்று; சூர் உருவின் பேய்,Soor Uruvin Pei - தெய்வமகளான யசோதையின் வடிவுகொண்டு வந்த பூதனையை அளவுகண்ட பெருமான்,Alavukanda Perumaan - முடித்த ஸ்வாமியியே! நீ அளவு கண்டநெறி,Nee Alavu Kandanerhi - நீ உலகளந்த விதத்தை அறிகிலேன்,Arikilain - அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன். |
| 2085 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் தான் தந்த வெளிச் சிறப்பு உடைய நான் இன்னும் நீச்சு நீரிலே புக்கப் போலே அலமரா நிற்க நாலு நாள் மூக்குப் புதைத்த வேற்றம் கொண்டு ஒருவன் இவ் வஸ்துவை ஸ்வ யத்னத்தாலே காண ஒருப்படுவதே – என்ன அறியானை தான் -என்கிறார் 4 | நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம் ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன் | அன்று,Andru - முன்பொரு காலத்தில், ஆலமரம் நீழல்,Aalamaram Neezhal - ஆலமரத்தின் நிழலிலே (இருந்துகொண்டு) நால்வர்க்கு,Naalvarkku - அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு அறம் உரைத்த,Aram Uraitha - தருமோபதேசம் செய்தவனும் ஆலம் அமர் கண்டத்து,Aalam Amar Kandathu - விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக்கொண்டுள்ளவனுமான அரன்,Aran - சிவன் ஜந்து பொறி வாசல்,Jandhu Pori Vaasal - செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும்வழியில் போர் கதவம் சார்த்தி,Por Kadhavam Saartthi - வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று] நெறிவாசல் தானே ஆய் நின்றானை,Nerivaasal Thaaney Aay Nindraanai - உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை அறிவான் ஆம்,Arivaan Aam - அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.) |
| 2086 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆகக் கீழ் – எல்லாம் கூட அவனே சர்வேஸ்வரன் என்று சொல்லிற்றாய் நின்றது இனி – அல்லாதாருடைய அநீஸ்வரத்வம் சொல்ல வேண்டி வருமே அதுக்கு உறுப்பாக அல்லாதார் உடைய அநீஸ்வரத்வம் சொல்லுகிறார் மேல் அறிவானாம் -என்று நீர் ருத்ரனை ஷேபியா நின்றீர் நாட்டார் அவனையும் ஈஸ்வரனாக அன்றோ பிரதிபத்தி பண்ணிப் போருகிறது -என்ன இன்னான் ஈஸ்வரன் – இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள் கொண்டே அறியலாம் – என்கிறார் – 5 | அரன் நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி, உரைநூல் மறையுறையும் கோயில், – வரைநீர் கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி, உருவமெரி கார்மேனி ஒன்று. | நாமம்,Naamam - ஒருவனுடைய பெயர் அரன்,Aran - எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாகவுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது; நாரணன்,Naarayanan - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (ஸர்வவ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது ஊர்தி,Ooruthi - ஒருவனுடைய வாஹனம் ஆன்விடை,Aanvidai - மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்; புள்,Pul - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (வேதமூர்த்தியான) கருடப்பறவையாகும்; உரை,Urai - ஒருவனைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணம் நூல்,Nool - மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்; மறை,Marai - (மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்) (ஸ்வயம்வ்யக்தமான) வேதமாகும்; உறையும் கோவில்,Urayum Kovil - ஒருவனுடைய வாஸஸ்தானம் வரை,Varai - (கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்; நீர்,Neer - (மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்) (அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்; கருமம்,Karumam - ஒருவனுடைய தொழில் அழிப்பு,Azhippu - (கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்; அளிப்பு,Azhippu - (மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்) (இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்; கையது,Kaiyadhu - ஒருவனுடைய கையிலுள்ள அயுதம். வேல்,Veel - (கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்; நேமி,Nemi - (மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்) அருளார் திருச்சக்கரம் உருவம்,Uruvam - வடிவம் எரி,Eri - (கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்; கார்,Kaar - (மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்) (கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்; ஒன்று,Ondru - சிவனாகிய ஒருவன் மேனி,Meeni - (ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்; [ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்] |
| 2087 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவானாம் என்றும் சரீரதயா சேஷ பூதன் -என்றும் ருத்ரனைச் சிரிக்கிற நீர் தாம் சேஷ பூதர் அன்றோ – நீர் பின்னை அவனை எங்கனே அறிந்த படியும் உபதேசிக்கிற படியும் என்ன அவன் தனக்கு சத்வம் தலை எடுத்த போது அவனை உள்ளபடி அறியும் அல்லாத போது ரஜஸ் தமஸ் ஸூ க்களாலே அபி பூதனாய் தான் அதிகரித்த கார்யத்தை புத்தி பண்ணி ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் எனக்கு அங்கன் அன்றிக்கே அவன் தான் காட்டக் கண்டேன் ஒருவன் ஆகையாலே எனக்கு ஒரு காலும் விஸ்ம்ருதி இல்லை என்கிறார் 6 | ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை | அன்று,Andru - அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே கரு அரங்கத்துள் கிடந்து,Karun Arangaththul Kidandhu - கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு, திருஅரங்கம்மேயான்,Thiruarangammeeyan - ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய திசை,Thisai - ஸ்வபாவங்களையெல்லாம் கண்டேன்,Kandein - ஸாக்ஷாத்கரித்தவனாய் கைதொழுதேன்,Kaithozhuthen - அஞ்ஜலியும் செய்தவனாகிய நான் ஓதம் நீர் வண்ணனை,Otham Neer Vannana - வெள்ளம் பரந்த ஸமுத்ரஜலம்போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப்பெருமானை. ஒன்றும் மறந்து அறியேன்,Ondrum Marandhu Ariyeen - க்ஷணகாலமும் மறந்தறிய மாட்டேன்: ஏழைகாள்,Ezhaikaal - (விஷயாந்தரங்களை விரும்பித்திரிகிற) அறிவு கேடர்களே! நான்,Naan - (அவனை மறக்கக்கூடிய கர்ப்பஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான். இன்று,Inru - (மறக்க முடியாதபடி ஞானவிகாஸம் பெற்ற இக்காலத்திலே) மறப்பனே,Marappane - எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.] |
| 2088 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக நீர் அவனையே ஆஸ்ரயணீயன் என்னா நின்றீர் பார்த்த பார்த்த இடம் எங்கும் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயாருமாய் அன்றோ கிடக்கிறது -என்ன அவை எல்லாம் அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்கை அன்றிக்கே தாம் தாமே காண நினைப்பார் – தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்கு -என்கிறார் தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி அவிதி பூர்வகம் -கீதை -9-23- யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்–கீதை -9-23- கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர். அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர். சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது. மம மாயா துரத்த்யயா -கீதை -7-14- தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–கீதை -7-14- ஹி ஏஷா குணமயீ மம தைவீ மாயா-ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை, துரத்யயா-கடத்தற்கரியது, யே மாம் ஏவ ப்ரபத்யந்தே-யாவர் என்னையே சரணடைவரோ, தே ஏதாம் மாயாம், தரந்தி-அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். 7 | திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் படைத்த மயக்கு | திசையும்,Thisaiyum - திக்குக்களோடு கூடிய உலகங்களும் திசைஉறு தெய்வமும்,Thisaiyuru Theivamum - அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும் தெய்வத்து இசையும் கருமங்கள்,Theivathu Isaiyum Karumangal - அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும் எல்லாம்,Ellam - ஆகிய இவையெல்லாம், அசைவு இல்சீர்,Asaivu Ilseer - கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய கண்ணன்,Kannan - ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த நெடு மால்,Nedu Maal - மிகப் பெருமையையுடையவனாய் கடல் கடைந்த,Kadal Kadaindha - (தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்புநோவக்) கடல் கடைந்தவனாய் கார் ஓதம் வண்ணன்,Kaar Oodham Vannan - மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவையுடையவனான எம்பெருமான் படைத்த,Padaitha - (தன்னிடம் வந்து பணியமாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கிவைத்த மயக்கு,Mayakku - அறிவை மயக்கும் பொருள்களாம். |
| 2089 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில் அது செய்வது சாதாரண விஷயத்தில் ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக் கார்யம் செய்யும் என்கிறார் 8 | மயங்க வலம் புரி வாய் வைத்து வானத் தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள் தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே போராழிக் கையால் பொருது | திருமாலே நீ,Thirumaale Nee - லஷ்மீநாதனே!, நீ முயங்கு அமருள்,Muyangu Amarul - (எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே மயங்க,Mayanga - எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக் வலம்புரி,Valampuri - ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை வாய் வைத்து,Vaai Vaiththu - தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி போர் ஆழிகையால்,Por Azhikayal - போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே பொருது,Poruthu - (பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து வானத்து இயங்கும் எறி கதிரோனை,Vaanaththu Iyanguum Eri Kathironae - ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை தேர் ஆழியால்,Thaer Aazhiyaal - சக்கராயுதத்தினால் மறைத்தது என்,Maraiththathu En - மறைத்தது எதுக்காக? |
| 2090 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வளவே அன்று கிடீர் – ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும் ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் 9 | பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மாவடிவின் நீ யளந்த மண் | விரி தோட்ட,Viri Thoatta - ஒளி விரிகின்ற திருக்குண்டலங்களை அணிந்துள்ளவனே! சே அடியை நீட்டி,Sae Adiyai Neetti - செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து திசை நடுங்க,Thisai Natunga - பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும் விண் துளங்க,Vin Thulangka - மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும் மா வடிவில்,Maa Vadivil - (திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு நீ அளந்த,Nee Alandha - நீ அளந்து திருவடி கீழ் இட்டுக்கொண்ட மண்,Man - பூமியானது, பொருகோடு ஓர் ஏனம் ஆய்,Porukodu Oor Aenam Aay - நிலத்தைக்குத்தியெடுத்துக்கொண்டுதிரிகிற கோரப்பற்களையுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய் புக்கு,Pukku - (பிரளயஜலத்திலே முழுகி) இடந்தாய்க்கு அன்று,Idandhaaykku Andru - அண்டபித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தியெடுத்துக் கொண்டுவந்த அக்காலத்தில் உன்,Un - உன்னுடைய ஒரு கோட்டின்மேல்,Oru Kottinmael - ஒரு கோரப்பல்லின் ஏகதேசத்திலே கிடந்தது அன்றே,Kidandhathu Andrae - அடங்கிக்கிடந்த தல்லவோ? |
| 2091 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்த படி சொல்லிற்று கீழ் இங்குச் சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்தபடி சொல்லுகிறது 10 | மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில் அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ் வுலகளவும் உண்டோ வுன் வாய் | மண்ணும்,Mannum - பூமியும் மலையும்,Malaiyum - குலபர்வதங்களும் மறிகடலும்,Marikadalum - அலையெறிகிற ஸமுத்ரங்களும் மாருதமும்,Maaruthamum - காற்றும் விண்ணும்,Vinnum - ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம் விழுங்கியது,Vilunkiyatu - (உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை மெய் என்பர்,Mei Enbar - ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்); எண்ணில்,Ennil - இதனை ஆராயுமளவில் அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்,Alaku Alavu Kanta Sir Aliyaykku Un Vay - அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம் எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது அன்று,Andru - இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில் இஉலகு அளவும் உண்டோ,Iulaku Alavum Undoo - இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ? |