| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2083 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2 | என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது, ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். | கடல் கடைந்தது,Kadal Kadaindhathu - (தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது |
| 2083 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2 | என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் | என்று,Enru - எந்த நாள்? நீர் ஏற்றது,Neer Aetrathu - (மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது எ உலகம்,E Ulagam - எந்த உலகம்? அதனை,Adhanai - அவற்றை நான் ஒன்றும் உணரேன்,Naan Ondrum Unaraen - நான் அடியோடு அரிகின்றிலேன்; அது,Adhu - அந்தக் கடலானது அன்று,Andru - ஸ்ரீராமாவதார காலத்தில் அடைத்து,Adaiththu - மலைகளைக்கொண்டு திருவணைகட்டித் தூர்த்து உடைத்து,Udaiththu - (இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து. கண்படுத்த,Kanpadutha - எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற ஆழி,Aazhi - ஸமுத்ரமாம்; இது,Idhu - (நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது நீ,Nee - ஸர்வேச்வரனான உன்னாலே படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டிக்கப்பட்டும் இடந்து,Idandhu - (வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும் உண்டு,Undu - (பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும் உமிழ்ந்த,Umizhndha - பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான பார்,Paar - பூமியாகும். |