| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2084 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வோவ பதானங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு அதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதா என்கிறார் 3 | பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீயளவு கண்ட நெறி | ஓர் அடி,Oor Adi - ஒரு திருவடியை பார் அளவும் வைத்து,Paar Alavum Vaiththu - பூமிப்பரப்பு உள்ளவரையிலும் போரும்படி வைக்க ஓர் அடியும்,Oru Adiyum - மற்றொரு திருவடியும் பார் உடுத்த,Paar Uduththa - இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற நீர் அளவும்,Neer Alavum - ஆவரண ஜலம் வரையில் செல்ல,Sella - செல்லும்படி நிமிர்ந்தது,Nimirndhadhu - ஓங்கிற்று; சூர் உருவின் பேய்,Soor Uruvin Pei - தெய்வமகளான யசோதையின் வடிவுகொண்டு வந்த பூதனையை அளவுகண்ட பெருமான்,Alavukanda Perumaan - முடித்த ஸ்வாமியியே! நீ அளவு கண்டநெறி,Nee Alavu Kandanerhi - நீ உலகளந்த விதத்தை அறிகிலேன்,Arikilain - அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன். |