Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2086 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2086முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆகக் கீழ் – எல்லாம் கூட அவனே சர்வேஸ்வரன் என்று சொல்லிற்றாய் நின்றது இனி – அல்லாதாருடைய அநீஸ்வரத்வம் சொல்ல வேண்டி வருமே அதுக்கு உறுப்பாக அல்லாதார் உடைய அநீஸ்வரத்வம் சொல்லுகிறார் மேல் அறிவானாம் -என்று நீர் ருத்ரனை ஷேபியா நின்றீர் நாட்டார் அவனையும் ஈஸ்வரனாக அன்றோ பிரதிபத்தி பண்ணிப் போருகிறது -என்ன இன்னான் ஈஸ்வரன் – இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள் கொண்டே அறியலாம் – என்கிறார் – 5
அரன் நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
உரைநூல் மறையுறையும் கோயில், – வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று.
நாமம்,Naamam - ஒருவனுடைய பெயர்
அரன்,Aran - எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாகவுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
நாரணன்,Naarayanan - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (ஸர்வவ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி,Ooruthi - ஒருவனுடைய வாஹனம்
ஆன்விடை,Aanvidai - மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
புள்,Pul - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (வேதமூர்த்தியான) கருடப்பறவையாகும்;
உரை,Urai - ஒருவனைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்,Nool - மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
மறை,Marai - (மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்) (ஸ்வயம்வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்,Urayum Kovil - ஒருவனுடைய வாஸஸ்தானம்
வரை,Varai - (கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;
நீர்,Neer - (மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்) (அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்,Karumam - ஒருவனுடைய தொழில்
அழிப்பு,Azhippu - (கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
அளிப்பு,Azhippu - (மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்) (இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது,Kaiyadhu - ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல்,Veel - (கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
நேமி,Nemi - (மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்) அருளார் திருச்சக்கரம்
உருவம்,Uruvam - வடிவம்
எரி,Eri - (கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
கார்,Kaar - (மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்) (கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று,Ondru - சிவனாகிய ஒருவன்
மேனி,Meeni - (ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்; [ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]