திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2087 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவானாம் என்றும் சரீரதயா சேஷ பூதன் -என்றும் ருத்ரனைச் சிரிக்கிற நீர் தாம் சேஷ பூதர் அன்றோ – நீர் பின்னை அவனை எங்கனே அறிந்த படியும் உபதேசிக்கிற படியும் என்ன அவன் தனக்கு சத்வம் தலை எடுத்த போது அவனை உள்ளபடி அறியும் அல்லாத போது ரஜஸ் தமஸ் ஸூ க்களாலே அபி பூதனாய் தான் அதிகரித்த கார்யத்தை புத்தி பண்ணி ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் எனக்கு அங்கன் அன்றிக்கே அவன் தான் காட்டக் கண்டேன் ஒருவன் ஆகையாலே எனக்கு ஒரு காலும் விஸ்ம்ருதி இல்லை என்கிறார் 6 | ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை | பதவுரை Show / Hideஅன்று,Andru - அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே கரு அரங்கத்துள் கிடந்து,Karun Arangaththul Kidandhu - கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு, திருஅரங்கம்மேயான்,Thiruarangammeeyan - ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய திசை,Thisai - ஸ்வபாவங்களையெல்லாம் கண்டேன்,Kandein - ஸாக்ஷாத்கரித்தவனாய் கைதொழுதேன்,Kaithozhuthen - அஞ்ஜலியும் செய்தவனாகிய நான் ஓதம் நீர் வண்ணனை,Otham Neer Vannana - வெள்ளம் பரந்த ஸமுத்ரஜலம்போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப்பெருமானை. ஒன்றும் மறந்து அறியேன்,Ondrum Marandhu Ariyeen - க்ஷணகாலமும் மறந்தறிய மாட்டேன்: ஏழைகாள்,Ezhaikaal - (விஷயாந்தரங்களை விரும்பித்திரிகிற) அறிவு கேடர்களே! நான்,Naan - (அவனை மறக்கக்கூடிய கர்ப்பஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான். இன்று,Inru - (மறக்க முடியாதபடி ஞானவிகாஸம் பெற்ற இக்காலத்திலே) மறப்பனே,Marappane - எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.] |