| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2090 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வளவே அன்று கிடீர் – ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும் ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் 9 | பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மாவடிவின் நீ யளந்த மண் | விரி தோட்ட,Viri Thoatta - ஒளி விரிகின்ற திருக்குண்டலங்களை அணிந்துள்ளவனே! சே அடியை நீட்டி,Sae Adiyai Neetti - செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து திசை நடுங்க,Thisai Natunga - பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும் விண் துளங்க,Vin Thulangka - மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும் மா வடிவில்,Maa Vadivil - (திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு நீ அளந்த,Nee Alandha - நீ அளந்து திருவடி கீழ் இட்டுக்கொண்ட மண்,Man - பூமியானது, பொருகோடு ஓர் ஏனம் ஆய்,Porukodu Oor Aenam Aay - நிலத்தைக்குத்தியெடுத்துக்கொண்டுதிரிகிற கோரப்பற்களையுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய் புக்கு,Pukku - (பிரளயஜலத்திலே முழுகி) இடந்தாய்க்கு அன்று,Idandhaaykku Andru - அண்டபித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தியெடுத்துக் கொண்டுவந்த அக்காலத்தில் உன்,Un - உன்னுடைய ஒரு கோட்டின்மேல்,Oru Kottinmael - ஒரு கோரப்பல்லின் ஏகதேசத்திலே கிடந்தது அன்றே,Kidandhathu Andrae - அடங்கிக்கிடந்த தல்லவோ? |