| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2115 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ் விஷயத்தில் தலையான பக்தி உடையளாய்க் கொண்டு பெற்றாள் யசோதைப் பிராட்டி ஒருத்தியும் இறே என்கிறார் புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் – என் இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது அன்றிக்கே இத்தை ஒருவர் மெய் என்னும்படி எங்கனே – என்னவுமாம் 34 | என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில் முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறே | முன், Mun - முற்காலத்தில் ஏழ் உலகு உண்டு, ஏழ் உலகு உண்டு - ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து ஆல் இலையில், ஆல் இலையில் - ஓர் ஆலந்தளிரிலே ஒருவன் ஆய, ஒருவன் ஆய - துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின முகில்வண்ணா, முகில்வண்ணா - காளமேகத் திருவுருவனான பெருமானே! நின் உருகி, நின் உருகி - உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள்போல மேலுக்குக்காட்டி முலை தந்தாள், முலை தந்தாள் - முலை கொடுத்தவளான பேய் தாய், பேய் தாய் - பேய்த் தாயாகிய பூதனை யானவள். பேர்ந்திலள், பேர்ந்திலள் - அவ்விடத்தில் றின்றும் பேரமாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்; பேர் அமர் கண், பேர் அமர் கண் - பெரிய அந்தயுத்த பூமியில் ஆய் தாய், ஆய் தாய் - இடைத்தாயாகிய யசோதையானவள் முலை தந்த ஆறு, முலை தந்த ஆறு - முலை கொடுத்தவிதத்தை ஒருவர், ஒருவர் - ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸபராகராதி ரிஷிகள் மெய் என்பர், மெய் என்பர் - மெய்யென்றுசொல்லாநிற்பர்கள்; என், என் - இது என்ன ஆச்சரியம்? |