திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2149 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2149முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவுக்கு பர்யவசாந பூமி அவன் அல்லது இல்லை – இங்கனே இருக்கச் செய்தே அவன் தன்னை அறிவார் தான் இல்லை என்கிறார் – 68
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி, உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீகிடந்த பால்?
பதவுரை Show / Hide
விண்ணகத்தாய், Vinnagaththai - பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே!
மண்ணகத்தாய், Mannagaththai - இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே!
வேங்கடத்தாய், Vengadaththai - திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய், Pan Naal Vedham Agaththai - ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே!
உன் பெருமை, Un Perumai - (இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி, Oozhi Thoru Oozhi - காலமுள்ளதனையும்
உணர்வார் ஆர், Unarvaar Aar - (இருந்து ஆராய்ந்தாலும்) அறியக்கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை, Un Uruvam Thannai - உனது திவ்யாத்மஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர், Unarvaar Aar - அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால், Nee Kidandha Paal - (ஆர்த்தரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர், Unarvaar Aar - அறிய வல்லாரார்? [எவருமில்லை.]