| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2183 | இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் -அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி – நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்- பக்தி பரவசராய் கவி பாடினார்க்கு அவன் கொடுக்கும் பரிசு சொல்லுகிறது – பக்தி பரவசர்களாய்க் கொண்டு -அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை – ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய ஸூரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார் 2 | ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள், தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், – வானத் தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள் பணியமரர் கோமான் பரிசு. | நாரணன் தன், Naaranan Than - ஸ்ரீமந் நாராயணனுடைய நாமங்கள், Naamangal - (திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும் மற்று, Mattru - மற்றும் அவன் பேர், Avan Per - அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும் ஞானத்தால், Gnanaththal - (ப்ரேமரூபமான) ஜ்ஞானத்தாலே நன்கு உணர்ந்து, Nangu Unarnthu - உள்ளபடியறிந்து தானத்தால், Thaanaththal - (ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று சாற்றினால், Saatrinhaal - அநுஸந்தித்தால், நங்கள் பணி அமரர் கோமான் பரிசு, Nangal Pani Amarar Koman Parisu - நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது, வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே, Vaanathu Ani Amarar Aakuvikkum Athu Andrae - பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம். |